சட்டவிரோத சூதாட்ட கிளப் : ரெய்டில் சிக்கிய த.வெ.க. நிர்வாகி !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சூதாட்ட கிளப்பில் அதிரடி சோதனையை நடத்திய போலீசார், த.வெ.க. நிர்வாகி உள்ளிட்டு 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மெத்தபட்டமைன் கடத்தல் விவகாரம் தொடங்கி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் வரையில் அடுத்தடுத்து த.வெ.க. நிர்வாகிகள் சர்ச்சையில் சிக்கிவரும் பின்னணியில், இப்படி ஒரு விவகாரம் அம்பலமாகியிருக்கிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

திருச்சிற்றம்பலம்,
திருச்சிற்றம்பலம்,

தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட முத்தம்மாள்காலனி பகுதியில் ரஹ்மத் நகர் அருகே ஹரிஷ்மா ரிகிரியேஷன் கிளப் என்ற பெயரில் சட்டவிரோதமாக சூதாட்ட கிளப் செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, நெல்லை சரக டிஐஜி (DIG): இரா. திருநாவுக்கரசு மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. இரா. சிவ பிரசாத் இ.கா.ப ஆகியோரின் உத்தரவின் பேரில், தூத்துக்குடி சிப்காட் போலீசார் அதிரடி சோதனையை நடத்தியுள்ளனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

போலீசாரின் சோதனையில், சட்டவிரோதமாக சூதாட்ட கிளப் இயங்கி வந்தது உறுதியானது. சட்டவிரோதமாக சூதாட்டம் ஆடிய 4 பேரை உடனடியாக கைது செய்த போலீசார், சூதாட்ட கிளப்பில் இருந்து 162 சூதாட்ட விளையாட்டு கார்டுகள், 110 பிளாஸ்டிக் டோக்கன்கள், 4 செல்போன்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.

இதனைதொடர்ந்து, மேற்படி சூதாட்ட கிளப்பை நடத்தி வந்த தூத்துக்குடி மாநகராட்சி 39-வது வார்டு பகுதியை சேர்ந்த த.வெ.க. நிர்வாகி திருச்சிற்றம்பலம் உள்ளிட்டு, தாளமுத்துநகரை சேர்ந்த மாரிமுத்து, பாளையங்கோட்டை கேடிசி நகரை சேர்ந்த விக்னேஷ் , திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த ராஜன், தாளமுத்துநகர் பகுதியை சேர்ந்த கருப்பசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

த.வெ.க. நிர்வாகி திருச்சிற்றம்பலம், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த்,  ஸ்ரீநாத், ரமேஷ், வெங்கட்ரமணன் உள்ளிட்டோருடன் நெருக்கமாக அரசு விழாக்களில் பங்கேற்ற புகைப்படங்கள் பல்வேறு வினாக்களை எழுப்பியிருக்கின்றன.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு, மூதாட்டியை தாக்கி நகையைப் பறித்தது, பெண் கடத்தல், வழிப்பறி, கொலை, கொள்ளை, கஞ்சா வழக்கு, போக்சோ வழக்கு என ஒரு வழக்கையும் விட்டுவைக்காமல் எல்லா வழக்குகளிலும் அடுத்தடுத்து த.வெ.க. நிர்வாகிகள் சிக்கி வருவது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

–              அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.