ரூ.134.59 கோடியில் நவீன மருத்துவக் கட்டடம் – திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்!
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனையில் தினமும் திருச்சி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற வருகின்றனர்.
அதிக அளவிலான மக்கள் சிகிச்சை பெற வருவதால் இடப்பற்றாக் குறை ஏற்பட்டது. இதற்காக 2024ம் ஆண்டு அப் போதைய திமுக அரசு ரூ. 110 கோடி மதிப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் மற்றும் 600 படுக்கைகளுடன்புதிய கட்டடம் கட்டுவதற்கு அனுமதியளித்து நிதி ஒதுக்கியது.
இதில், பல்வேறு வகையான சிகிச்சை மையங்கள், பரிசோதனைக் கூடங்கள், அறுவை சிகிச்சை மையங் கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒதுக்கப்பட்ட நிதி பற்றாக்குறை ஏற்பட்டதால்கடந்த 2025 ஆம் ஆண்டு கட்டுமான பணிக்காக ரூபாய் 24.59கோடி கூடுதல் மீது ஒதுக்கப்பட்டது தீயணைப்பு அவசர வழி படிக்கட்டுகள் சாய் தன வசூல் படிக்கட்டுகள் நோயாளிகள் பயன்பாட்டுக்கான மூன்று லிப்ட் பொருட்கள் கொண்டு செல்வதற்கு அவர்களுக்கு அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது பயன்பாட்டு உள்ளவர்களாகவும் புற்றுநோய் உள்ளிட்டு சூழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் அல்லது தனி சிறப்பு வாய்ந்த புதிய கட்டடத்தில் தமிழக முதலமைச்சர் நாளை 20 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கிறார். புதிய கட்டடத்தில் அமைந்துள்ள சிகிச்சை பிரிவுகள் பின் வருமாறு:-
தரைத்தளம்
எலும்பியல் மருத்துவம் முதியோர் வெளி நோயாளிகள் பிரிவு மருந்து கிடங்கு மருந்தகம் கதிரியக்கத்துறை பசுமை பிரிவு மஞ்சள் பிரிவு உயர் கண்காணிப்பு பிரிவு
காணிப்பு பிரிவு, சிவப்பு பிரிவு, நோய் தீவிரம் சார்ந்து பிரிக்கப்படும் இடம். 50 படுக்கைகள் கொண்ட விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை பிரிவு, மருந்தகம், முட நீக்கியல், மூத்தோர் புற நோயாளிகள் பிரிவு.
முதல் தளம்
முதல் தளத்தில் மூக்கு தொண்டை, பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, பல் மருத்துவம், தோல் மருத்துவம், மார்பக மருத்துவ வெளி நோயா ளிகள் பிரிவுகள், உயிரி வேதியியல் ஆய்வகம்.
இரண்டாம் தளம்
இரண்டாவது தளத்தில் அறுவை சிகிச்சை, எலும்பியல் சிகிச்சை தீவிர பிரிவு, விபத்து அவசர அறுவை சிகிச்சை அரங்கு, பொது அறுவை வசிகிச்சை அரங்கு, அறுவை சிகிச் சைக்கு பிறகு மீட்பு படுக்கைகள்.
3வது தளம்
3வது தளத்தில் ஆழ் கவனிப்பு மருத்துவம், நச்சியியல் தீவிர சிகிச்சை, எலும்பியல் அறுவை சிகிச்சை அரங்கு, பல்ம ருத்துவம், காது மூக்கு, அறுவை தொண்டை சிகிச்சை அரங்கு, அறுவை சிகிச்சைக்கு பிறகு மீட்பு படுக்கைகள்.
4வது தளம்
4வது தளத்தில்
ஆண்கள் எலும்பியல் உள் மருத்துவ பயனாளர் பிரிவு, பொது மருத்துவ உயர்கண்கா ணிப்பு பிரிவு, ஆண்கள் எலும்பியல் உள் மருத்து வம், பெண்கள் எலும்பி யல், நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வகம், ரத்த வங்கி,
5வது தளம்
5வது தளத்தில் ஆண்கள் மருத்துவ பயனாளர் பிரிவு,எக்ஸ்ரே பிரிவு, அறுவை சிகிச்சை உள் மருத்துவ நோயாளிகள் பிரிவு.
6வது தளம்
6வது தளத்தில் 165 படுக்கை கொண்ட பொது அறுவை சிகிச்சை மற்றும் தீ பல், இஎன்டி சிகிச்சை உள்நோயாளிகள் பிரிவு உள்ளது.






Comments are closed, but trackbacks and pingbacks are open.