Friday, November 20, 2026 | 7:05 PM IST

தங்கம் விலை திடீர் சரிவு! அமெரிக்காவின் ஆட்டமா… உலகப் பொருளாதார மாற்றமா?

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

உலக மக்களின் ஒட்டுமொத்த அந்நியசெலவாணி தங்கம்தான். தங்கத்தை விரும்பாத மக்கள் எந்த நாட்டிலும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு தங்கள் அனைத்து மக்களையும் தன்வசம் ஈர்த்து வைத்துள்ளது. கடந்த பல மாதங்களுக்கு முன்பு 1 இலட்சத்து 30 ஆயிரம் அளவுக்கு உச்சம் தொட்ட, தங்கம் இப்போது 1 இலட்சத்து 8 ஆயிரமாக (24 காரட்) குறைந்துள்ளது. நம்பமுடியாத அளவுக்குத் தங்கத்தின் விலை குறைந்துள்ளதற்கு காரணம்  என்ன?

  1. இன்றைய தங்கம் விலை நிலவரம் (நவம்பர் 17, 2026)

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

தங்கத்தின் தரம்                                     1 கிராம் விலை                         1 சவரன் (8 கிராம்) விலை

22 காரட் (ஆபரணத் தங்கம்)          ரூ.12,470                                           ரூ.99,760

24 காரட் (சுத்தத் தங்கம்)                                   ரூ.13,604                                           ரூ.1,08,832

18 காரட் தங்கம்                                        ரூ.10,205                                           ரூ.81,640

கடந்த அக்டோபர் தொடங்கி நவம்பர் வரையில் சுமார் ஒரு மாதத்தில் மட்டும் ஒரு கிராமுக்கு ரூ.1,410 வரையும், ஒரு சவரனுக்கு சுமார் ரூ.11,280 வரையும் (சுமார் 10% அளவிற்கு) விலை குறைந்துள்ளது. (கடந்த ஜனவரி 2026-ல் சவரன் ரூ.1.34 லட்சம் என்ற உச்சத்தைத் தொட்ட நிலையில், அங்கிருந்து இப்போது சுமார் 25% சரிந்துள்ளது).

தங்கம் –  திடீர் விலைச் சரிவுக்கான காரணங்கள் :  

தங்கம் விலை குறைவதற்கு உலகளாவிய பொருளாதார மாற்றங்களே முக்கியக் காரணமாக உள்ளன. அவற்றைப் பின்வரும் கருத்துகளின் அடிப்படையில் புரிந்துகொள்ளலாம்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அமெரிக்க வட்டி விகித உயர்வு :

அமெரிக்க மத்திய வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது; வரும் டிசம்பரிலும் மேலும் உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகள் மற்றும் அரசுப் பத்திரங்களில் அதிக வட்டி கிடைக்கும்போது, முதலீட்டாளர்கள் வட்டி வருமானம் தராத தங்கத்தை விற்றுவிட்டு, பத்திரங்களில் முதலீடு செய்கின்றனர்.

அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு:

சர்வதேச சந்தையில் தங்கம் அமெரிக்க டாலரிலேயே வர்த்தகம் செய்யப்படுகிறது. டாலரின் மதிப்பு வலுவடையும்போது, மற்ற நாடுகள் தங்கத்தை வாங்குவது அதிக செலவாகும் என்பதால் சர்வதேசத் தேவை குறைந்து விலை சரிகிறது.

லாபத்தைப் பதிவு செய்தல் :

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டதால், தங்கப் பத்திரங்கள் மற்றும் இ.டி.எஃப் (Gold ETF) மூலம் முதலீடு செய்திருந்த பெரிய முதலீட்டாளர்கள் தங்களுக்குக் கிடைத்த லாபத்தைப் பணமாக்கத் தங்கத்தை விற்றுவிட்டு பங்குச் சந்தைக்கு மாறியுள்ளனர்.

கச்சா எண்ணெய் மற்றும் பணவீக்க அச்சம்:

சர்வதேசப் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் உலக நாடுகளில் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதைச் சமாளிக்க மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்காமல் தொடர்ந்து உயர்த்துவது தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வத்தைக் குறைத்துள்ளது.

இறுதியாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்திற்குப் பதிலாக அமெரிக்க டாலர் மற்றும் அரசுப் பத்திரங்களை நோக்கித் திரும்பியதே இந்த விலை வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணமாகும் என்கிறார்கள் உலகப் பொருளாதார நிபுணர்கள்.

— ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.