Saturday, November 28, 2026 | 1:53 PM IST

சினிமாவை வாழ வைக்க வந்த ’பத்திரிகையாளர்கள்’ !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

ஆன்ட்ராய்டு போன் வருகைக்குப் பின்னால் 10 ஆயிரத்திற்கு செல்போன் வாங்கியவர்கள் எல்லாம் ‘மீடியா’ ஆகிவிட்டார்கள். 10 வருடத்திற்கு முன்னால் 10 பத்திரிகையாளர்கள் மட்டுமே பணியாற்றிய இடத்தில் இப்போது 100 பத்திரிகையாளராகி விட்டார்கள்.

இது மற்ற துறைகளை விட சினிமா துறையில் அதிகமாகிவிட்டது. 200-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் சினிமாவை வாழ வைக்க வந்து விட்டார்கள்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பது தவிர்க்க முடியாததுதான். இதனை கட்டுப்படுத்த வேண்டியவர்களே இதனை முழு மனதோடு ஆதரிப்பதும் தவிர்க்க முடியாததாகிறது.

காரணம் ஆண்டுக்கு சுமார் 200 சிறு பட்ஜெட் படங்கள் வெளிவருகிறது. இதில் குறைந்தபட்சம் 50 படங்கள் தியேட்டருக்கு வராமலேயே போய் விடுகிறது.

தனது சினிமா ஆசையை தணிக்க, தனது மகன், அல்லது மகளை சினிமா நாயகன், நாயகியாக்கி பார்க்க… வீடு, நிலத்தை விற்று சினிமா எடுக்க வருகிறவர்கள் அதிகம். சிலருக்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம்.

அப்படி வருகிறவர்களில் 99 சதவிகிதம் பேர் தங்கள் பணத்தை இழந்து கண்ணீருடன் திரும்புகிறார்கள். பிரசாத் லேப் வாசலில் இந்தக் கண்ணீரை அடிக்கடி பார்க்கலாம்.

இப்படியானவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் பிரஸ் மீட், ஆடியோ நிகழ்ச்சி போன்றவைதான். தனக்கு முன்னால் இருக்கும் கேமராக்கள், கூடியிருக்கும் பத்திரிகையாளர்களை பார்த்து அவர்கள் வியந்து போகிறார்கள், ஒரு புதிய நம்பிக்கையைப் பெறுகிறார்கள். அவர்களுக்கு குறைந்தபட்ச மகிழ்ச்சி கிடைப்பது இந்த மாதிரியான நிகழ்வுகளில்தான். அதனால் பெரும் திரளான கூட்டத்தைக் கூட்டிக் காட்ட வேண்டியது நிகழ்ச்சியை நடத்துபவர்களின் கட்டாயமாகிறது.

புதிதாக வந்த பத்திரிகையாளர்கள், காட்சி முடிந்ததும் கேட்கும் கேள்விகள் அவர்களுக்கு மன உளைச்சலைத்தான் தருகிறது.

இப்படியான வாசல் பேட்டிகளில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன். நம் இன போராளிகளை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட ஒரு படம் குறித்து கேட்டேன். அதுவும் கூட தவறுதான்.

ஒரு படம் வெளியான பிறகு அந்த படத்தின் விமர்சனத்தை, கேள்விகளை ஒவ்வொரு பத்திரிகையாளர்களும் தங்கள் தளத்தில் விமர்சிப்பதுதான் நாகரீகமான நடைமுறை.

படம் எடுத்து விட்டு அது தியேட்டரில் வெளியாகுமா? ஆகாதா? வெற்றி பெறுமா? பெறாதா? போட்ட பணமாவது வருமா? என்ற ஆயிரம் கவலையோடு நிற்கிறவர்களிடம் அந்த காட்சி எப்படி, இந்த காட்சி ஏன் வைத்தீர்கள், நீங்கள் ஏன் ஜாதி படம் எடுத்தீர்கள் என்று கேள்வி கேட்டு துளைப்பது அத்தனை நாகரீகமானதல்ல. ‘வெற்றி பெற வாழ்த்துகள்’ என்றால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

படம் தொடர்பான சிக்கலோ, பிரச்சினையோ இருந்தால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரோ, இயக்குநரோ பத்திரிகையாளர் காட்சிக்கு முன்போ, பின்போ அரங்கில் பகிர்ந்து கொள்ளலாம்.

ஆனால், இந்த மாதிரியான ‘வாசல் பேட்டிகள்’ எந்த படத்திற்கும் உதவியதாகத் தெரியவில்லை. மாறாக படம் சம்பந்தப்பட்டவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மன உளைச்சலையே தருகிறது.

எந்த கேள்வி கேட்கப்பட வேண்டும் என்பதை விட, எந்த கேள்வியை கேட்க கூடாது என்பதில்தான் கேட்பவரின் அறிவு விசாலமாக இருக்கிறதா? என்பதை தீர்மானிக்கிறது.

அதை விட்டு விட்டு சில பேர் நான் ‘காமெடியாகவும் கேள்வி கேட்பேன், ‘காம’ நெடியாகவும் கேள்வி கேட்பேன்’ என்று விதிமுறை வகுத்து கேட்பதை அறியாமை என்பதா? அல்லது நான்தான் திறமையானவன் என்பதை மற்றவர்களுக்கு சொல்ல நினைக்கிறார்களா? என்று தெரியவில்லை.

‘காண்ட்ரவர்சி’ என்பது தானாக உருவாவதுதானே தவிர, உருவாக்கப்படுவதில்லை. அப்படி உருவாக்குவது மலிவான ஜர்னலிசம்.

இதையெல்லாம் நான் சொன்னால், ரிட்டையர்டு கேசு, முத்தின கத்திரிகா என்று இகழ்வார்கள். மற்றவர்களை இகழும் இழிவான குணம் அவர்களது ரத்தத்திலேயே இருக்கிறது.

‘நீ மட்டும் யோக்கியமா? ஒரு பெண் தொகுப்பாளினியின் ஆடை குறித்து கேட்டாயே?’ என்பார்கள். இதற்கு நான் ஆயிரம் முறை விளக்கம் சொல்லிவிட்டேன்.

கோடைக்காலத்தை எப்படி சமாளிப்பது என்று பத்திரிகையாளர்களுக்கு ‘டிப்ஸ்’ கொடுத்த தொகுப்பாளினியிடம் ‘நீங்கள் அணிந்திருக்கும் ஆடை கோடை காலத்திற்கு ஏற்றதா?’ என்று கேட்டேன். ‘ஆம் நான் உடுத்தியிருப்பது கைத்தறி ஆடை கோடைகாலத்திற்கு நல்லது’ என்று அந்த தொகுப்பாளினி பதிலளித்திருக்க வேண்டும்.

மாறாக, என் கேள்வி பெண்ணின் ஆடை சுதந்திரத்தை பறிக்கிறது என்று அவர் விளம்பரம் தேட நினைத்தார். அந்த தொகுப்பாளினிக்கு ஆதரவாக கருத்திட்டவர்கள்கூட மறுநாள் தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டார்கள்.

ஒரு சிலர் போல் எனது குடும்ப சூழ்நிலையைச் சொல்லி ‘மன்னிப்பு வீடியோ’ வெளியிடவில்லை.

– மீரான் முகமது

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.