Saturday, November 28, 2026 | 6:31 PM IST

ஒரே நேரத்தில் 115 புத்தகங்கள் வெளியீடு! உலக சாதனை நிகழ்வில் கவிஞர் விவேகா!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

கடந்த 14-ஆம் தேதியன்று அரபு நாடான ஷார்ஜாவில் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு மொழிகளின் புத்தகங்கள் இடம்பெற்றிருந்தது. இந்த கண்காட்சியில் புத்தக வெளியீட்டு நிகழ்வுக்கான பிரத்யேக கலையரங்கமும் அமைக்கப்பட்டிருந்தது.

கவிஞர் விவேகா
கவிஞர் விவேகா

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இந்த அரங்கத்தில் கற்றல் கல்வி மையத்தின் நிறுவனரும், கல்வியாளருமான ஸ்ரீ ரோகிணி தலைமையில் கற்றல் பதிப்பகம் பதிப்பித்த 115 புத்தகங்கள் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இதில் கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான விவேகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஒரே தருணத்தில் 115 புத்தகங்களை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தமிழ், அரபி, பிரஞ்சு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில்  115 எழுத்தாளர்களின் 115 நூல்கள் ஒரே மேடையில் வெளியிடப்பட்டது இந்த நிகழ்வில் தான் என்றும்… இது ஒரு உலக சாதனை என்றும்.. பன்மொழி அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

12 வயதுக்குள் 5 மொழிகளில் நூல்கள் எழுதிய காதம்பரி  என்ற சிறுமியும் மேடையில் கவுரவிக்கப்பட்டார்!

—    ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.