கொரானா தடுப்பூசிக்கான டோக்கனை 100 ரூபாய்க்கு விற்ற திருச்சி போலீஸ்!
கொரானா தடுப்பூசிக்கான டோக்கனை 100 ரூபாய்க்கு விற்ற திருச்சி போலீஸ்!
கொரானா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மூன்றாவது அலையிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள தாமாக முன்வந்து தடுப்பூசி முகாம்களில் போடப்படும் கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டு செல்கின்றன.
அவ்வாறு திருச்சி மாநகரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபம் மற்றும் சத்திரம் பகுதியில் உள்ள தேவர் ஹால் ஆகிய இரு இடங்களில் கோவாக்ஸின் தடுப்பூசி போடப்பட்டது. இதில் கலையரங்கம் முகாமில் ஆயிரம் தடுப்பூசிக்கு 1500 பேர் வந்ததால் முகாமே ஸ்தம்பித்தது. மேலும் அதிகாலை 4 மணியிலிருந்து மக்கள் வரிசையில் நின்று இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில் கலையரங்கம் தடுப்பூசி முகாமில் 1000 தடுப்பூசிக்கு முதலில் 750 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
மதியம் 2 மணி வரை சென்ற இந்த 750 டோக்கன் அதன்பின்பு மற்றவர்களுக்கு மீதமுள்ள டோக்கன் வினியோகித்துள்ளனர். அப்படின்னு வினியோகித்த டோக்கனை பணியில் இருந்த போலீசார் பாதியை வாங்கிக்கொண்டு அவசரம் என்று சொல்பவர்களுக்கு 100 ரூபாய்க்கு விற்றுள்ளனர்.
இதனால் காலையிலிருந்து வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள், எப்படி தற்போது வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கலாம் என்று சிறிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்பின் அவர்கள் விசாரித்ததில் போலீசாரே டோக்கனை விலைக்கு விற்றது தெரியவந்தது.
–இந்தர்ஜித்