திமுகவில் பெண் மாவட்ட செயலாளர்கள் ; கனிமொழியின் அடுத்த மூவ் !

0

திமுக திராவிட பாரம்பரியத்தைக் கொண்டது. இந்த பாரம்பரிய சமூகநீதி, பெண் விடுதலை, சுயமரியாதை, பகுத்தறிவு போன்ற கொள்கைகளை கொண்டது.

ஆனால் இந்தக் கொள்கைகளை பற்றி பேசக்கூட செய்யாத அதிமுகவிற்கு பெண்கள் ஓட்டு உள்ளது. இந்தக் கொள்கைகளை கடைபிடிக்கக் கூடிய திமுகவில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறப்பட்ட சூழலில் கலைஞரின் மகளான கனிமொழி கருணாநிதி அரசியலுக்கு வந்த பிறகு அவருக்கான முக்கியத்துவம் வழங்கப் பட்டது. மேலும் சுப்புலட்சுமி ஜெகதீசன் போன்ற பெண் நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப் பட்டிருக்கிறது.

2 dhanalakshmi joseph
4 bismi svs

இந்த நிலையில் கனிமொழி கருணாநிதி திமுக அரசியலில் முக்கிய பங்காற்றி வருகிறார். தற்போது மகளிர் அணிச் செயலாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகிக்கிறார். இவர் தலைமையிடம் திமுகவில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறாராம்.

மேலும் எம்ஜிஆர் காலத்திலிருந்தே பெண்கள் ஓட்டு என்றால் அது அதிமுகவின் பக்கம் தான் இருக்கிறது. ஜெயலலிதாவும் பெண்களின் ஒட்டு வங்கியை தக்க வைத்துக்கொண்டார். இந்த நிலையில் தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசு பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் பெண்களுக்கு அரசுப் பேருந்தில் இலவச பயணம் என்ற அறிவிப்பு, பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

- Advertisement -

- Advertisement -

ஆனாலும் பெண்கள் ஓட்டு பெருமளவில் திமுகவின் பக்கம் வருவது இல்லை, இந்த நிலையில் திமுகவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பெண்களுக்களின் ஓட்டுக்களை பெறுவதற்கான முயற்சியில் இறங்க வேண்டும் என்று கனிமொழி, திமுக தலைமைக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார். இதைக்கேட்ட மு க ஸ்டாலின் இது உண்மை தான், கட்சியில் பெண்களுக்கான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.
இதன் அடிப்படையில் புதிதாக நியமிக்கப்பட உள்ள மாவட்ட செயலாளர்களின் பட்டியலில் பெண்களும் இடம் பெற வேண்டும் என்றும், மேலும் முக்கிய பொறுப்புகளுக்கு பெண்களை நியமிக்க வேண்டுமென்றும் முடிவெடுத்து உள்ளாராம். விரைவில் திமுகவில் பெண் மாவட்டச் செயலாளர்கள் இடம் பெறுவார்கள் என்று அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.