உள்கட்சி தேர்தல் -உள்ளடி உடன்பிறப்புகளுக்கு முடிவு ; திமுக தலைமை போடும் ஸ்கெட்ச் !
சமீபத்தில் கோயம்புத்தூரில் நடைபெற்ற பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலினிடம் நிர்வாகிகள் பலரும் உள்ளடி வேலையின் காரணமாக தோல்வி அடைந்ததாக தங்கள் வேதனைகளை வெளிப்படுத்தினார்கள். கண்டிப்பாக அவர்கள் களை எடுக்கப்படுவார்கள் அவர்கள் மீது முதல்வர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்று கூறியிருந்தார்.
இது அடுத்து அறிவாலய வட்டாரத்தில் விசாரிக்கும் பொழுது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர இருப்பதால் தற்போது நிர்வாகிகள் மாற்றத்திற்கு வாய்ப்பு கிடையாது.
தேர்தல் முடிந்தவுடனேயே உள்கட்சித் தேர்தலை நடத்த திமுக ஆயத்தமாக உள்ளது. உள்கட்சி தேர்தலில் மிக விரைவாக நடத்தப்பட உள்ளதால் அந்த தேர்தலில் உள்ளடி வேலை பார்த்த உடன்பிறப்புகளுக்கு இனி எங்கு வேலை இல்லை என்று கூறி அனுப்பி விடுவார்கள், சிலர் கட்டம் கட்டப்பட்டு விடுவார்கள்.
மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பலரும் வார்டு கவுன்சிலருக்கு போட்டி போட முயற்சி எடுக்கின்றனர். ஆனால் யாருக்கு தலைமை சீட்டு கொடுக்கிறதோ அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டியது மற்ற நிர்வாகிகளின் கடமை, யாரேனும் உள்ளடி வேலை பார்த்தால் அவ்வளவு தான், அதனால் வரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் நிர்வாகிகளின் உள்ளடி வேலை குறையும் இதனால் அதிக இடங்களில் வெற்றி பெற்று கட்சியும் வலிமை பெறும் என்று கூறினார்கள்.