திருச்சி காவல் கட்டுப்பாட்டு அறை எண்-100க்கு நூறு முறை முயற்சித்தாலும் பலன் இல்லை

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

“திருச்சி காவல் கட்டுப்பாட்டு அறை எண்-100க்கு போன் செய்தால் நூறு முறை முயற்சித்தாலும் பலன் இல்லை”

அவசர உதவிக்கு 100. இதனை அறிந்திராதவர்கள் யாரும் இல்லை. ஆனால் சமிப நாட்களில் அவசரத்திற்கு திருச்சி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100ஐ தொடர்பு கொண்டால் லைன் கிடைக்கவில்லை என்பது தான் எதார்த்தம். மேலும் பல நேரங்களில் இந்த எண் உபயோகத்தில் இல்லை என தகவல் வருகிறது. இதற்கு உதாரணமாக….

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

உதாரண சம்பவம் -1

(09.11.19) ந் தேதி இரவு சுமார் 12.15மணிக்கு திருச்சி நீதிமன்றம் எதிரில் ஒரு விபத்து_இதனை தொடர்ந்து திருச்சி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொல்ல முயற்சித்தால்_தொடர்பு கிடைக்கவே இல்லை.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

உதாரண சம்பவம் -2

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கடந்த இரு நாட்களுக்கு முன்பாக திருச்சி, இராமகிருஷ்ணா பாலம் கீழ் பகுதியில் இரவு 8.45மணியளவில் ஒருவருடைய பர்சை நான்கு நபர்கள் அடித்து பறித்து சென்றதாக நண்பர் ஒருவர் போன் மூலம் தகவல் சொன்னார். அதற்கு நான் 100க்கு போன் செய்து தகவல் தெரிவிக்க சொன்னேன். ஆனால் கடைசி வரை லைன் கிடைக்கவில்லை என நண்பர் தெரிவித்தார்.

இது போல் எண்ணிலடங்கா சம்பவங்களை என்னால் உதாரணம் சொல்ல முடியும். ஏனெனில் இது தற்பொழுதைய பிரச்சினை இல்லை.

மேலும் அவசர உதவிக்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்தால் தொடர்பு கிடைக்காததற்கு காரணம் தொலை தொடர்பு நிறுவனங்களா…? இல்லை காரணம் என்ன என்பதை மாநகர காவல் துறை ஆராயப்பட வேண்டும்.

இல்லையெனில் விலை மதிப்பு சில தகவல்களை காவல் துறை இழக்க நேரிடும்.

குறிப்பு: இந்த கட்டுரை எழுதும் பொழுது 100க்கு தொடர்பு கொண்டேன். ஆனால்…???

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.