வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை
பள்ளி வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை
விளையாட்டில் கவனம் செலுத்தாததால் பயிற்சி ஆசிரியர் கொச்சை வார்த்தைகளில் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் ரஞ்சித்திற்கு அப்பா இல்லாததால் படிப்பு செலவிலிருந்து அனைத்தையும் அவரது அம்மாவே பார்த்து வந்தார்…..
நாகப்பட்டினம் சுனாமிகுடியிருப்பை சேர்ந்த சீனிவாசனின் மகன் ரஞ்சித். திருவாருரில் உள்ள வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தார். வாலிபால் விளையாட்டில் ஆர்வமுடையவராக இருந்த ரஞ்சித் பள்ளியில் வாலிபால் குழுவில் இணைந்து விளையாட ஆரம்பித்தார். திருவாரூரில் திமுக பிரமுகரான கடை ஏழு வள்ளல்களில் ஒருவரின் பெயரைக்கொண்ட நபரின் பள்ளியான இது. விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து மாநில அளவில் பல பதக்கங்களை பெற்றிருக்கின்றனர்.
சம்பவத்தன்று (10/11/2019) ஞாயிற்றுக்கிழமை வாலிபால் பயிற்சிக்காக சென்ற ரஞ்சித் சரியாக விளையாட்டில் கவனம் செலுத்தாததால் பயிற்சி ஆசிரியர் கொச்சை வார்த்தைகளில் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் ரஞ்சித்திற்கு அப்பா இல்லாததால் படிப்பு செலவிலிருந்து அனைத்தையும் அவரது அம்மாவே பார்த்து வந்தார். இந்நிலையில் பயிற்சியை முடித்துவிட்டு சென்ற மாணவன் ரஞ்சித் வகுப்பறையில் தூக்கிட்டு இறந்திருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வகுப்பறையிலேயே மாணவன் தூக்கிட்டு இறந்திருப்பது காவல்துறை வட்டாரங்களில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.