கழுத்தில் கால்களால் மிதித்து மாணவி பலாத்காரம் காமக்கொடூரன் கார் டிரைவர் கைது
உடலுறவின் போது கத்தியதால் கழுத்தில் கால்களால் மிதித்து மாணவி கொடூரக்கொலை
காமக்கொடூரன் கார் டிரைவர் கைது.
சீர்காழியைச் சார்ந்த 15 வயது பள்ளி மாணவி கற்பழித்து கொலை..
நாகை மாவட்டம், சீர்காழி கிழக்கு ஒன்றியம் திருவெண்காடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட கீழசட்டநாதபுரம் கே. தமிழரசன் அவர்களின் 15 வயது கொண்ட மகள் செல்வி ஆசிகா நாங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறாள்..
நேற்று மாலை 5 மணியளவில் சிறப்பு வகுப்புகள் முடிந்து பள்ளியை விட்டு வந்த அவர் தன் அம்மாவிடம் பாத்ரூம் செல்ல கொல்லைக்கு போவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் அவரை தேடி அவரது அம்மா வீட்டின் பின்னே இருக்கும் காட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது சுமார் 200 மீட்டர் தூரத்தில் ஆசிகா கிடந்துள்ளார். அதனை கண்டு அவர் சத்தமிட்டு கத்தியதில் அருகில் உள்ளவர்கள் அனைவரும் ஓடிவந்து சிறுமியை பார்த்தனர். அப்போது சிறுமி மூச்சு பேச்சு இல்லாமல் இறந்து கிடந்துள்ளார்.
பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெண்காடு போலீசார் ஆசிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் போலீசார் விசாரணை தொடங்கியதில் சிறுமி பாத்ரூம் செல்வதாக அவரது அம்மாவிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
விசாரணையின் போது போலீசாருக்கு அதே பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி மகன் கல்யாணசுந்தரம்(வயது30) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் கல்யாணசுந்தரத்தை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வாய்க்கால் அருகே தனியாக நடந்து சென்ற மாணவியை கண்ட கல்யாணசுந்தரம் அவளை பின் தொடர்ந்து சென்று தவறாக நடக்க முயன்றதும் இதற்கு மாணவி உடன்படாததால் அவளை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
மேலும் உடலுறவு கொண்டபோது மாணவி கத்தியதால் பயத்தில் கல்யாணசுந்தரம் மாணவியின் கழுத்தில் தனது கால்களால் மிதித்து கொலை செய்து விட்டு ஒன்றும் தெரியாதது போல தனது வீட்டுக்கு சென்றதும் தெரியவந்தது.
பின்னர் சிறுமியின் அம்மா தேடுவதைக்கண்டு ஒன்னும் தெரியாததை போல் அவரும் கூட தேட சென்றுள்ளார். பின்னர் சிறுமியின் உடலைக்கண்டு கத்திக்கதரி நாடகமாடியுள்ளார். இதற்கிடையில் போலீசார் அப்பகுதியில் குடித்துக்கொண்டிருந்த நபர்களை விசாரித்ததில் அவர்கள் தனக்கும் இதுக்கும் சம்பந்தம் கிடையாது. என்று தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் அறிந்த அப்பகுதி பெண் ஒருவர் சமத்துவ நடந்த நேரத்தின் போது அவ்வழியே கல்யாணசுந்தரம் தான் குளிக்கச்செல்வதாக கூறி சென்றதாக கூறியுள்ளார்,
அதனடிப்படையில் கல்யாணச்சுந்தரத்தை பிடித்து விசாரித்து போலீசார் கல்யாணசுந்தரத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கல்யாணசுந்தரத்துக்கு திருமணமாகவில்லை என்றும் அவர் டிரைவராக பணியாற்றி வந்ததும் குறிப்பிடத்தக்கது. பள்ளி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.