இந்த திருச்சி ஆட்டோ ரவி யாருன்னு தெரியுமா ?

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

 

ஆட்டோ ரவி மதிமுகவில் 27 வருடமாக தொண்டர் அணியில் இருக்கும் நபர் .

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

ஆட்டோ ஓட்டுவது மூலம் கிடைக்கும் சின்ன வருமானத்தின் பெரும் பகுதியை மதிமுக இயக்க செயல்பாடுகளுக்கு செலவு செய்த நபர் .

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

சில நாட்களாக உடல் நலக்குறைவு என்பதால் வெகு தூரம் ஆட்டோ ஓட்ட கூடாது என்று கண்டிப்புடன் சொல்லி இருக்கிறேன் .

3

தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு கூட குடும்பத்தினருக்கு நல்ல உடை வாங்கியதாக எனக்கு நினைவில்லை. ஆனால் மதிமுக நடத்திய எல்லா போராட்ட களத்திலும் குறைந்த பட்சம் 5 பேரை அழைத்து வந்து செலவு செய்யும் நபர் .

நேற்று தலைவர் வைகோ அவர்களின் தாயார் அன்னை மாரியம்மாள் அவர்களின் நினைவு தினம். தலைவர் வைகோ அவர்களை கலிங்கப்பட்டியில் பார்த்து நினைவு தினத்தன்று அவரருகே இருக்க கலிங்கப்பட்டிக்கு ஆட்டோவில் பேனரை கட்டிக்கொண்டு சென்று இருக்கிறார் ##

4

தலைவர் வைகோ அவர்களும் ஏன் உடல் நல குறைவுடன் வந்தாய் என கடிந்து கொண்டு ரேணுகா அம்மாவிடம் ரவிக்கு சாப்பாடு கொடுத்து அனுப்பு என்று சொல்லி இருக்கிறார் .

திருச்சியில் இன்று காலை மருத்துவமனையிக்கு செல்வற்க்கு வெளியே வந்தால் ரவியின் ஆட்டோ நின்றது. நீயெல்லாம் என் பேட்ச்சை கேட்க மாட்ட 500 கிலோ மீட்டர் ஆட்டோ பயணமா என திட்டிவிட்டு மருத்துவமனையிக்கு போய்விட்டேன் .

வேலை முடிந்ததும் ரவியின் நினைவு வந்தது. பாவம் இப்படி திட்டி விட்டோம் என, என் உதவியாளரிடம் போன் பண்ண சொன்னேன். மருத்துவமனையிக்கு வெளியே தான் நிற்கிறார் என அழைத்து வந்தார்கள் .

தீபாவளிக்காக ரவிகுடும்பத்துக்கு வாங்கி வைத்து இருந்த புத்தாடைகளை கொடுத்தேன். எனக்கு எதற்காக 1250 ரூபாய்க்கு சாரதி மதிமுக வேட்டி என்றார் .

ஆட்டோ ரவி தன்னுடைய பொருளாதார சூழ்நிலைக்கு மதிமுக இயக்கத்திற்கு செலவு செய்து இருப்பது உண்மை.

ஆனால் இயக்கம் ரவி போன்றவர்களுக்கு என்ன செய்து உள்ளது , எந்த பதிலும் நம்மிடம் இல்லை .

நேரடியாக பொறுப்புகளுக்கு வருவதும் தேர்தல் களத்திற்கு வரும் என்னை போன்றவர்கள் தலைவர் வைகோ தாயாரின் நினைவு தினம் அன்று அங்கு போகவில்லை.

முகநூலில் – Rohaiyaah sheik mohammed

 

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.