கேங்ஸ்டார் கொலைகளில் சிக்கி தவிக்கும் டெல்டா மாவட்டங்கள் !
கேங்ஸ்டார் கொலைகளில் சிக்கி தவிக்கும் டெல்டா மாவட்டங்கள் !
சமீப காலமாக சென்னை, மதுரை, திருநெல்வேலியை அடுத்து டெல்டா மாவட்டங்களில் கேங்ஸ்டர் கொலைகள் பெருகி வருக்கின்றன. ஒரு கேங்கிள் ஒருதலை உருண்டால் எதிர் கேங்கிள் இரண்டு தலை உருள்வது போன்ற கொலை சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதில் பெரும்பாலும் பழிக்குப்பழி வாங்குவது போன்ற காரணமாக கொலை சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே களப்பாலகரம் நடுத்தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 46) இவர் மீது பாலையூர் காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகள் இருந்து வந்த நிலையில் இவ்வழக்குக்காக மோகன் ஒரு ஆண்டுக்கு முன்பு ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் விடுதலையானார். சிறையில் இருந்து வெளியில் வந்த அவர் சிறிது காலம் வடமட்டம் போன்ற பகுதிகளில் டாஸ்மாக் பார்களை ஏலம் எடுத்து நடத்தி வந்தார். இந் நிலையில் 03.11.2019 இரவு 9மணிக்கு நண்பர்களுடன் காரைக்கால் ஒயின் ஷாப்பிற்கு சென்று குடித்துவிட்டு தனது சொந்த காரில் மோகன் தனியாக வந்து கொண்டிருந்தார்.
அப்போது பரவக்கரை கருவேலி சாலை அருகே அவருடைய காரை வழிமறித்து ஒரு மர்ம ஆசாமி லிப்ட் கேட்டதாக கூறப்படுகிறது அப்போது காரைவிட்டு மோகன் இறங்கியபோது அவரது பின்னே ஆட்டோவில் பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் மோகனின் முகத்தில் ஸ்பிரே அடித்து அவரது கையை வெட்டி அடையாளம் தெரியாத விதமாக முகத்தை சிதைத்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது அந்த மர்ம கும்பல்.
இச்சம்பவத்தில் மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நன்னிலம் காவல்துறை சூப்பிரண்டு சுகுமார், இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சப் இன்ஸ்பெக்டர் உத்திராபதி ஆகியோர் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி உடலை பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகராறுகள் ஏற்படாதவாறு வடமட்டம் முழுவதும் 100 மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இக்கொலை சம்பவம் குறித்து போலீஸ் விசாரணையில் கடந்த 2007 ஆம் ஆண்டு நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள முஷ்டக்குடியில் ஆசிர்வாதம் தியாகராஜன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மோகன் ஆயுள் தண்டனை கைதியாக கைது செய்யப்பட்டார். கொலைசெய்யப்பட்ட ஆசிர்வாதம் மகன் அந்தோணிசாமி தனது தந்தை கொலைக்கு பழி தீர்க்க இந்த கொலையை செய்திருக்கலாம் என்று விசாரித்து வந்த நிலையில் அந்தோணிசாமி (39) ராமு மகன் சுந்தர் (27) குத்தாலம் அருகே உள்ள வயலூர் பாரதி மன்ற தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கவியரசன் (27) பிச்சயன் மகன் கேசவன் (39) மயிலாடுதுறை அருகே உள்ள தளிகை கோட்டையை சேர்ந்த கலைவாணன் (35) ஆகிய 5 பேரும் தஞ்சை மாவட்டம் திருவையாறு கோர்ட்டில் சரணடைந்தனர் இவர்கள் அனைவரையும் 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார் இதனைத்தொடர்ந்து இந்த ஐந்து பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த கோங்ஸ்டார் கொலைகளினால் டெல்டா மாவட்ட பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இதை மத்திய மண்டல காவல்துறை தலைவர் அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.