பராமரிப்பு பணிகள் காரணமாக சேலம் – கோவை பயணிகள் ரயில் சேவை ரத்து !
இந்தியன் ரயில்வே சார்பில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக
சேலம் – கோவை பாசஞ்சர் ரயில் இன்று (16.05.2023) முதல் 16 நாட்களுக்கு ரத்து …
சேலம் ரயில்வே கோட்டத்தில் இருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டுவருகிறது. ரயில் பாதை பராமரிப்பு பணிக்காக சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டும் மாற்று பாதையில் இயக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில், ஈரோடு – சேலம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாள பாதையில் பராமரிப்பு பணியை மேற்கொள்ளும் பொருட்டு இந்த மார்க்கத்தில் சென்று வந்த இரயில்களின் சேவையை தற்காலிகமாக நிறுத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இந்திய இரயில்வே.
இதன்படி, கோவையில் இருந்து காலை 9.05 மணிக்கு புறப்படும் கோவை – சேலம் பாசஞ்சர் ரயில் (வண்டி எண் 06802) மற்றும் சேலத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் சேலம்- கோவை பாசஞ்சர் ரயில் (வண்டி எண் 06803) ஆகிய இரயில்களின் சேவை இன்று முதல் வருகிற மே-31 ந் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக் சேலம் ரயில்வே கோட்ட அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– சோழன் தேவ்.