அங்குசம் சொன்னது! நாகசைதன்யாவும் சொல்கிறார்!
அங்குசம் சொன்னது! நாகசைதன்யாவும் சொல்கிறார்!
கடந்த இதழ் ஜில்லுன்னு சினிமா பகுதியில் ‘சமந்தாவை சரித்த சாபமும் கோபமும்’ என்ற தலைபில் இரண்டு பக்க செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்த பின்பும் சமந்தாவின் சண்டித்தனம் தொடர்ந்ததாலும் வேறு பல காரணங்களாலும் சமந்தாவை சைதன்யா விவாகரத்து செய்யும் நிலைக்கு ஆளானார் என்பதையும் சொல்லியிருந்தோம்.
வெங்கட்பிரபு டைரக்ஷனில் நாக சைதன்யா ஹீரோவாக நடித்த தமிழ்-தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி மே.12-ஆம் தேதி ரிலீசாகியுள்ளது. இப்படத்தின் புரமோ நிகழ்ச்சியிலும் பிரஸ்மீட்டிலும் பேசும் போது, “சமந்தாவைப் பற்றிய பரவிய தொடர்ச்சியான வதந்தி வேதனையளித்தது. ஒருகட்டத்தில் வேதனை தாங்க முடியாமல் விவாகரத்து செய்ய வேண்டிய நிலைக்கு ஆளானோம்” என மனம் விட்டுப் பேசியுள்ளார் நாக சைதன்யா. நாம் அதை உண்மைச் செய்தியாக எழுதினோம். நாகசைதன்யா “வதந்தி” என்கிறார். இரண்டுமே கரெக்ட் தானே.
-மதுரை மாறன்