ரஜினி பாலிஸி! ‘ஸ்ட்ரிக்ட் பாலிஸி’
லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் தனது மகள் ஐஸ்வர்யாவின் டைரக்ஷனில் ‘லால் சலாம்’ படத்தில் கௌரவத் தோற்றத்தில் வரும் தனது போர்ஷன் ஷூட்டிங்கிற்காக மும்பைக்குப் போயிருக்கிறார் சூப்பர் ஸ்டார் படத்தின் பூஜை நாளன்றே லைக்கா சுபாஸ்கரனிடமும் சி.இ.ஓ.தமிழ்க்குமரனிடமும் “என்னை முன்னிலைப்படுத்தி பிஸ்னஸ் பண்ணாதீர்கள்” என ஸ்ட்ரிக்டாக சொல்லியிருந்தார். இப்போது தனது சம்பந்தப்பட்ட சீன்களின் ஷூட்டிங் ஆரம்பித்துள்ள நிலையில் மீண்டும் அந்த பாலிஸியை ‘ஸ்ட்ரிக்ட்’டாக வலியுறுத்தியுள்ளாராம்.
அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் இன்னொரு ஸ்பெஷல் பாலிஸியும் உள்ளது. அது என்னன்னா, அவரது படங்களின் தயாரிப்பாளர், டைரக்டர் யார் என்பதை முடிவு பண்ணி, அவர் ஓ.கே சொன்ன பிறகு தான் அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவுப்பு, பத்திரிகைகளில் வரும். இதை கிட்டத்தட்ட 30 வருடங்களாக ‘ஸ்ட்ரிக்ட்’டாக கடைப்பிடித்து வருகிறார் ரஜினி. சில தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் ஆர்வக்கோளா றினாலோ, சில தினசரி பத்திரிகை நிருபர்களிடம் தங்களுக்கு இருக்கும் நெருக்கம், செல்வாக்கு இவற்றால், “இவர் தான் ரஜினியின் அடுத்த பட தயாரிப்பாளர், இவர் தான் டைரக்டர்” என்ற நியூசைக் கசியவிடுவார்கள். அந்த செய்தியும் கிட்டத்தட்ட உண்மையாக இருந்தாலும், இதையெல்லாம் ரஜினி விரும்பமாட்டார். உடனே தயாரிப்பாளரையும் டைரக்ட ரையும் மாற்றிவிடுவார்.
30 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவமே சாட்சி.
அதாவது மணிரத்னம் டைரக்ஷனில் அவரது அண்ணன் ஜி.வெங்க டேஸ்வரன் தயாரிப்பில் உருவான ரஜினியின் ‘தளபதி’ படம் சூப்பர்ஹிட்டானது. இதனால் ஹேப்பியான ஜி.வி.யும் மணியும் அடுத்தும் ரஜினியை வைத்து கல்லா கட்டவேண்டும் என்ற ஐடியாவுடன் பிரபல தினசரியில், “ரஜினியின் அடுத்த படத்தையும் டைரக்ட் பண்ணப் போவது மணிரத்னம் தான். ‘சக்கரவர்த்தி’ என்ற டைட்டில் கூட பரிசீலனையில் இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள்” என அரைப்பக்க அளவில் நியூஸைக் கசியவிட்டார்கள். ரஜினிக்குத் தெரியாதா இவர்களின் கள்ளத்தன கல்லா கட்டும் வித்தை.
பி.வாசு, சுரேஷ்கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரை ஓ.கே.செய்து, ‘மன்னன்’, ‘உழைப்பாளி’, ‘அண்ணாமலை’ ‘பாட்ஷா’, ‘வீரா’, ‘முத்து’, ‘படையப்பா’ என கம்பீர வெற்றி நடை போட்டார். யாருமே எதிர்பார்க்காத வகையில் பா.இரஞ்சித்தை செலக்ட் பண்ணினார். அதற்கப்புறம் ஏ.ஆர்.முருகதாஸ், சிவா ஆகியோருடன் ஒர்க் பண்ணினார்.
‘தர்பார்’ ரிலீசான சில வாரங்கள் கழித்தும் ‘அண்ணாத்த’ ரிலீசான பின்பும் “ரஜினியின் அடுத்த பட டைரக்டர்கள் லிஸ்டில் தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ், சிபிசக்கரவர்த்தி ஆகியோர் இருக்கிறார்கள்” என்ற நியூஸ் அதே பிரபல தினசரியில் ‘லீக்’கானது’. இதில் தேசிங்கு பெரியசாமியையும் சிபி சக்கரவர்த்தியையும் ரஜினி கன்ஃபார்ம் பண்ணி வைத்திருந்தாலும் இந்த நியூஸ் ‘லீக்’ அந்த டைரக்டர்களுக்கே ‘வீக்’காகி வினையாகிவிட்டது.
யாருமே எதிர்பாராத வகையில் ‘ஜெய்பீம்’ டைரக்டர் த.செ.ஞானவேலை ஓ.கே.செய்துவிட்டார் ரஜினி. ‘லால் சலாம்’ படம் முடிந்ததும் இந்தப் படத்தை ஆரம்பிக்கிறார் லைக்கா சுபாஸ்கரன்.
”இந்தப் படத்திற்கு அடுத்து ரஜினி படத்தை டைரக்ட் பண்ணப் போவது யார்?” என இப்போதே லிஸ்ட் போட ஆரம்பித்துவிட்டது அந்த தினசரி. பாவம்யா.. அந்த டைரக்டர் களோட வாழ்க்கைய சோதிக் காதீங்கய்யா…
-மதுரை மாறன்