அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் அதிகாரிகள் அடாவடி…  வேடிக்கை பார்த்த அறநிலையத்துறை?

0

மதுரை வைகை ஆற்றில் வடகரை, தென்கரை குறுக்கே 1886ம் ஆண்டு கட்டப்பட்ட மிகப்பழமையான பாலம் ஆல்பர்ட் விக்டர் பாலமாகும். 16 தூண்கள் வளைவுகளுடன் உள்ள இந்த பாலம் 12 மீட்டர் அகலம், 250 மீட்டர் நீளம் கொண்டதாக உள்ளது. இந்த பாலம் வழியாக தினந்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து சென்று வருகின்றன. இதுதான் மதுரையை இருபுறமும் இணைத்த முதல் பாலம்.

மதுரை மக்கள் கொந்தளிப்பு
இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்தை விஐபிக்கள் கார்களில் சென்று பாலத்தின் மீது நின்று காண்பதற்காக பாலத்தின் கைப்பிடிச் சுவரை உடைத்து பாதை உருவாக்கப்பட்டது. இச்சம்பவம் மதுரை மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை சமூக ஆர்வலர்களும், சில அமைப்பினர்களும் எதிர்ப்பு குரல் கொடுத்து தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

ரோஸ்மில்

விஐபிக்கள் என்பவர்கள் யார்?
வைகை ஆற்றுப்பகுதிக்கு வந்த தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறனை நம் அங்குசம் இதழ் சார்பில் நேரில் சந்தித்தோம். அப்போது அவர், “எந்த வருஷமும் இல்லாத கூத்தும், கும்மாளமும் இந்த வருஷம் நடந்திருக்கு. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு என்ன செஞ்சிக்கிட்டுக்காரு மதுரை சித்திரை திருவிழா திருமலை நாயக்கர் காலத்திலிருந்து பல வருஷமா நடந்து வருது. 60, 70 வயது முதியவர்களை கூட்டத்தில் இடைஞ்சல் இல்லாம பாலத்தின் மீது திருவிழாவை பார்க்க வைக்க வேண்டும். அரசியல்வாதிகள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், விஐபிக்கள் என்பவர்கள் யார்? வெறும் மக்கள் பிரதிநிதிகள் தான். உங்களுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்தான் விஐபிக்கள்.

- Advertisement -

- Advertisement -

4 bismi svs

திருவிழாவின் முதல் நாளே.. நான் வைகை ஆற்றை நேரில் சென்று பார்த்தபோது அந்த பகுதியில் புதர் போல செடிகள் வளர்ந்திருந்தது. ஆற்றில் இறங்கும் பொதுமக்களுக்கு இது ஆபத்து இதை உடனடியாக அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் என மதுரை மாவட்ட கலெக் டர், மாநகராட்சி ஆணையர், மேயர், பொதுப் பணித்துறையினர் என அத்தனை பேருக்கும் வேண்டுகோள் வைத்தேன், இதனை யாராவது செவி கொடுத்து கேட்டார்களா?

அமைச்சர் பதவி விலகணும்
பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் ஏ.வி. பாலத்தை விஐபிக்காக அடைத்து வைச்சாங்க. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி நீரில் மூழ்கி 4 பேர் இறந்தனர். இச்சம் பவத்தால் தெருக்களில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அழகர் ஆற்றில் இறங்கும் இடம் அருகே கொலையும் நடந்திருக்கு. லட்சக்கணக்கானோர் திரளும் இடத்தில் விஐபிக்கள், அதிகாரிகளுக்கு மட்டும்தான் சாமி தரிசனமா? பொது மக்களுக்கு இல்லையா? அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலகணும்.


முதல்வர் நடவடிக்கை எடுக்கணும்
மதுரையில் இதுவரை எத்தனையோ பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த ஏவி பாலத்தைபோல் இனி கட்ட முடியுமா? அழகர் பெயரைச் சொல்லி அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஆட்டம் போடுகிறார்கள். திருப்பூர், அலங்காநல்லூர், அவனியாபுரம், சிந்தாமணி ஆகிய பகுதிகளில் உள்ள இளைஞர்கள் தலைமுறை தலைமுறை யாக பச்சை விசிறியை வீசி அழகரை அவ்வளவு அழகாக தூக்கிச் சென்று வருவார்கள், அவர்களை அழகர் இறங்கும் இடத்தில் அனுமதிக்கவில்லை. ஏன் இதையெல்லாம் கோயில் நிர்வாகம் குறைத்துவிட்டது. இதற்கு அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கண்டிப்பாக பதில்கூற வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாறன் படபடவென பேசி முடித்தார்.

-ஷாகுல், படங்கள்: ஆனந்த்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.