குழந்தை திருமணம் இல்லா மாவட்டம் – மிதிவண்டி பேரணி
குழந்தை திருமணம் இல்லா தேனி மாவட்டத்தை உருவாக்குவது குறித்த விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி,
உலக மிதிவண்டி தினத்தினை முன்னிட்டு பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் குழந்தை திருமணம் இல்லாத தேனி மாவட்டத்தை உருவாக்குவது தொடர்பாக நடைபெற்ற விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
மிதிவண்டிகள் பயன்படுத்தும் பழக்கங்களை குறைந்து வரும் நிலையில் அதனை மீண்டும் பயன் படுத்த வேண்டும் , அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் மிதிவண்டி பயன்பாட்டினை அதிகரிப்பதற்கும் , பெண் குழந்தைகளுக்கு கற்போம் கற்பிப்போம் என்ற தலைப்பில் பெண் குழந்தைகளை பாதுகாப்பது, சிறுவயதில் நடைபெறும் திருமணங்களை தடுப்பதை வலியுறுத்தும் விதமாக உலக மிதிவண்டிகள் தினத்தில் இந்த பேரணியானது நடைபெறுகிறது.
பெண் குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பாக மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் சமூக நலத்துறை இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது அதன் தொடர்ச்சியாக இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேரணியானது மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தொடங்கி சுங்கச்சாவடி வழியாக சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் வளாகம் வந்து நிறைவுபெற்றது. பேரணியில் குழந்தை திருமணத்தை ஒழிப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள், தன்னார்வர்கள் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா , துணை ஆட்சியர் பயிற்சி முகமது பைசல் , துணை காவல் கண்காணிப்பாளர் சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஜெ.ஜெ.