தரமான படைப்பாக தயாராகி இருக்கிறது ‘போர் தொழில்’!
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கலைச்செல்வம் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையைமத்திருக்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை இந்துலால் கவீத் மேற்கொண்டிருக்கிறார். புலனாய்வு திரில்லர் ஜானரிலான இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியாஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. ஜுன் 9 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், ” போர் தொழில் படத்தை பார்த்து விட்டேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது. தரமான படைப்பாக தயாராகி இருக்கிறது. தயாரிப்பாளரான முகேஷ் மேத்தா நான்கு மாதங்களுக்கு முன்னரே இப்படத்தைப் பற்றி விவரித்திருக்கிறார். இந்த திரைப்படம் ‘ராட்சசன்’ திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது, எவ்வாறான உணர்வு ஏற்பட்டதோ.. அதைவிட ஒரு மடங்கு கூடுதலான உணர்வை இந்த திரைப்படம் அளிக்கும்.


அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ‘போர் தொழில்’ திரைப்படத்தை திட்டமிட்டு தயாரிப்பதுடன், அதனை விளம்பரப்படுத்துவதற்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் போன்றவர்கள் திறமையாக நடித்திருக்கிறார்கள். சரத்குமார் இதுபோன்ற கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சரத்குமாரின் இடத்தை நிரப்புவதற்கு தென்னிந்தியாவில் எந்த நட்சத்திரங்களும் இல்லை என உறுதியாக கூறலாம். அவர் இந்த படத்தில் தன் திறமையான நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
‘ஓ மை கடவுளே’ படத்திற்குப் பிறகு அசோக் செல்வன் நடித்திருக்கும் இந்த ‘போர் தொழில்’ படத்தை வெளியிடுகிறேன். இந்தத் திரைப்படத்திலும் அசோக் செல்வன் சாக்லேட் பாயாக அறிமுகமாகி, உச்சகட்ட காட்சியில் நம் மனதில் பதிந்து விடுவார்.
படத்தின் இயக்குநரான விக்னேஷ் ராஜா படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய விதத்தை பார்த்து, ‘இந்த இயக்குநர் எதிர்காலத்தில் சிறந்த இயக்குனராக வருவார்’ என இப்படத்தில் நடித்திருக்கும் மூத்த தயாரிப்பாளராக பி. எல். தேனப்பன் என்னிடம் தெரிவித்திருக்கிறார். இந்த இளம் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியிருக்கும் ‘போர் தொழில்’ திரைப்படம் சுவாரசியமான திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.” என்றார்.
