தமிழக அரசே கள்ளு கடைகளை நடத்தலாம் – கார்த்தி ப.சிதம்பரம்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கார்த்தி ப.சிதம்பரம் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டுமானால் தமிழக அரசே கள்ளு கடைகளை திறந்து உரிய அதிகாரிகள் மேற்பார்வையில் நடத்திட வேண்டும். மேலும், வரும் பாராளுமன்ற தேர்தலில் 39க்கு 39 சீட்டுகளை திமுக காங்கிரஸ் கூட்டணி பிடித்து மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும், மேகதாது அணை பிரச்சனையில் தமிழகத்தை பாதுகாக்க தமிழக அரசும், பிற கட்சிகளும் முழு முயற்சி மேற்கொள்ளும் என்றும் கூறினார்.
பாராளுமன்ற கட்டிடம் அதிக இருக்கைகள் கொண்டு கட்டப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு அது ஏன் என்று எனக்கு புரியவில்லை என்ற கார்த்தி ப.சிதம்பரம், பொருளாதாரத்தை திறம்பட வழி நடத்தும் திறமை பாஜக தலைமையிடமோ, அதன் அமைச்சர்களிடமோ இல்லை என்றும் குற்றம் சாட்டினார். மின்சாரத் துறையில் உள்ள ஒன்றை லட்சம் கோடி ரூபாய் கடனை குறைத்தால்தான் மின்சாரத் துறையை சீர் செய்ய முடியும் என்றவர், அதற்குப் பல வழிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
-பாலாஜி