அங்குசம் பார்வையில் ‘டக்கர்’

0

அங்குசம் பார்வையில் ‘டக்கர்’

தயாரிப்பு: ஃபேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் & ஜெயராம். டைரக்‌ஷன்: கார்த்திக் ஜி. கிரிஷ். நடிகர்—நடிகைகள்: சித்தார்த், திவ்யான்ஷா, யோகிபாபு, அபிமன்யூ சிங், முனீஸ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த். ஒளிப்பதிவு: வாஞ்சிநாதன் முருகேசன், இசை: நிவாஸ் கே.பிரசன்னா, ஸ்டண்ட்: தினேஷ் காசி, எடிட்டிங்: ஜி.வி.கெளதம். பி.ஆர்.ஓ. சுரேஷ் சந்திரா டி ஒன்.

https://businesstrichy.com/the-royal-mahal/

பயந்த சுபாவமுள்ள ஹீரோ சித்தார்த்துக்கு பணக்காரனாக வேண்டும் என்பது ஆசை, லட்சியம். இதற்காக தனது குடும்பத்தைவிட்டுவிட்டு சென்னைக்கு வருகிறார். பல இடங்களில் வேலை பார்த்தும் சரிப்பட்டு வராமல், ஒரு ஃபாரின் தாதாவிடம் டிரைவர் வேலைக்குச் சேர்ந்து காஸ்ட்லியான பென்ஸ் காரை ஓட்டுகிறார். ரோட்டில் போகும் போது எதேச்சையாக ஹீரோயின் திவ்யன்ஷாவைப் பார்த்துக் கொண்டே காரை ஓட்ட, பெரிய ஆக்சிடெண்ட் நடந்து பென்ஸ் கார், அப்பளமாக நொறுங்கிவிடுகிறது.

இதனால் டென்ஷனான தாதா பாஸ், சித்தார்த்தை மூஞ்சி முகரையை உடைத்து, ”ஏழு வருசத்துக்கு சம்பளமே இல்லாமல் வேலை பாரு, இல்லேன்னா உன்னோட தங்கச்சிய அனுப்பு” என்கிறார். வேறு வழியே இல்லாமல் சம்பளம் இல்லா டிரைவராக இருக்க சம்மதிக்கிறார். மேன்சனில் தங்கியிருக்கும் போது, முதலாளி அடிச்சுட்டானே என்ற வெறுப்பில் பிராந்தியில் விசம் கலந்து தற்கொலைக்கு முயல, ஃபெயிலியராகிறது.  இது சரிப்பட்டு வராது, ஏதாவது ஒரு ரவுடிக்கும்பலிடம் வம்பிழுத்தால் அவனுகளே அடிச்சுக் கொன்னுருவானுக என்ற முடிவுடன் போதையில்  வாண்டடாக போய் வண்டியில் ஏறுகிறார் சித்தார்த். அங்கே திடீரென ரெண்டு பேரைப் பார்த்ததும் வீராவேசத்துடன் ரவுடிக்கும்பலை பொளந்து கட்டிவிட்டு, ஒரு காருடன் அங்கிருந்து கிளம்புகிறார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

கொஞ்ச தூரம் போனதும் டிக்கியிலிருந்து சத்தம் வர, திறந்து பார்த்தால் ஹீரோயின் திவ்யன்ஷா. சித்தார்த் அடித்துப் போட்ட ரவுடிக்கும்பலின் தலைவன் அபிமன்யூ சிங் தான் திவ்யன்ஷாவைக் கடத்தி காரின் டிக்கியில் வைத்திருந்து, திவ்யன்ஷாவின் அப்பாவிடம்  1 கோடி கேட்டு மிரட்டுகிறான். அப்பா பார்த்த மாப்பிள்ளையைப் பிடிக்காததால் வீட்டுக்குப் போக பிடிக்காமல், சித்தார்த்துடனே காரிலேயே பயணிக்கிறார் திவ்யன்ஷா. க்ளைமாக்ஸ் என்ன? எப்படி? என்பது தான் ‘டக்கர்’.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ரொமான்ஸ், காமெடி, த்ரில்லர் ஜானரில் போய்க் கொண்டிருந்த சித்தார்த் இந்த ‘டக்கரில்’ ஆக்‌ஷன் ஹீரோவாக எண்ட்ரியாகி, பாஸ் மார்க்கும் வாங்கிவிட்டார்னு தான் சொல்லணும். இவரது ஆக்‌ஷன் சீக்வென்ஸுக்காக நன்றாக உழைத்திருக்கிறார். இதற்கான பாராட்டுகள் முழுவதும் ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் காசிக்குத் தான் சொந்தம். ஆக்‌ஷன் பிரதானம் என்றாலும் திவ்யன்ஷாவுடன் ரொமான்ஸிலும் குறையே வைக்கவில்லை சித்தார்த்.

ஹலோ பிரதர் டைரக்டர் கார்த்திக் ஜி, இந்த திவ்யன்ஷாவை எங்கிருந்துங்க கண்டுபிடிச்சுக் கூட்டிட்டு வந்தீங்க. அழகோ அழகு அம்புட்டு அழகு. செம செக்ஸ் அப்பீல் தலைவா. தம், தண்ணி, போதைப் பவுடர் என பொண்ணு ஹைடெக்லயும் ரொம்பவே ஹைடெக்கா, பியூட்டி டெக்கா கலக்கி எடுத்திருக்கு. சித்தார்த்துடன் பெட்ரூம் சீன்லயும் பின்னிப் பெடலெடுத்துருக்கு. வாம்மா… பியூட்டி குயின், தமிழ்ல்ல கான்சண்ட்ரேட் பண்ணினா, பல ஹீரோயின்களின் மார்க்கெட் அவுட். அப்படி ஒரு திவ்ய தரிசனம் திவ்யன்ஷாவின் தரிசனம்.

காமெடிக்கு யோகிபாபுவையும் முனீஸ்காந்த்தையும் கமிட் பண்ணியிருக்கிறார்கள். ஆனால் காமெடி தான் நமக்கு கமிட்டாகவில்லை. தேசிய நெடுஞ்சாலையில் பரபரக்கும் சீன்களுக்காக கேமராமேன் வாஞ்சிநாதன் முருகேசனும் சேஸிங் டெம்போவை மெயிண்டெய்ன் பண்ண மியூசிக் டைரக்டர் நிவாஸ் கே.பிரசன்னாவும் கச்சிதமாக உழைத்திருக்கிறார்கள்.

இந்த ஆண்ட்ராய்டு போன் காலத்திலும் அளவில்லா அல்ட்ரா மார்டனாக இருக்கும் யூத்துகளுக்காக இந்த ‘டக்கர்’ படத்தை எடுத்திருக்கிறார் டைரக்டர். ஸ்கிரீன்ப்ளேயில் இருக்கும் ’மக்கர்’ சரி பண்ணப்பட்டிருந்தால் டக்கர் டாப் டக்கரா இருந்திருக்கும்.

–மதுரைமாறன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.