அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சோனாவின் ‘ஸ்மோக்’ வி.ஐ.பி.கள் ‘ஷாக்’ ‘பேரம்’ ஸ்டார்ட்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

சோனாவின் ‘ஸ்மோக்’ வி.ஐ.பி.கள் ‘ஷாக்’ ‘பேரம்’ ஸ்டார்ட்!

கவர்ச்சி நடிகையா? காமெடி நடிகையா? இல்ல ரெண்டும் கலந்த கலவையா? ன்னு புரியாத அளவுக்கு தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் சோனா. பார்ப்பதற்கு தழுக் மொழுக்குன்னு இருக்கும் சோனா, நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்டா வரவேண்டியவர் தான். ஆனா கேரக்டர் ரூட்ல போனா சீக்கிரம் கல்லா கட்ட முடியாது என நினைத்து ‘படுகிளாமர்’ ரூட்ல இறங்கினார்.

இந்த வார JANUARY 15 - 21 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

தமிழ்ஃபீல்டு சரிப்பட்டு வராது என நினைத்து டாக்டர் ராஜசேகர்&ஜீவிதா தம்பதிகள் மூலம் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கி னார். கவர்ச்சி ரூட்டில் கதிகலக்கியதால் வெகு சீக்கிரமே கல்லாப்பெட்டி நிரம்பி வழிந்தது. அப்புறம் மலையாளக் ‘கரையோரம் ஒதுங்கி, பிருத்விராஜ் அரவணைப்பிலும் ஆதரவிலும் இருந்து சில படங்களில் ஷகிலாவுக்கே சவால்விடும் அளவுக்கு “ஓப்பன்“ கிளாமரில் தூள் கிளப்பினார். இதனால் மூன்று மொழி சினிமா வி. ஐ.பி.களும் சோனா மீது சொக்கிக் கிடந்தனர்.

சோனாவின் “இன்கம் பாக்ஸ்“ இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்டையே மலைக்க வைத்தது. அப்படியெல்லாம் மலைக்கக் கூடாது என கணக்குப் போட்ட சோனா, ‘யுனிக் கலெக்க்ஷன்’ என்ற பெயரில் சென்னையில் ஹைகிளாஸ் லேடீஸ்க்கான ஷோரூம் ஒன்றைத் திறந்தார். அதே பெயரில் சினிமாக் கம்பெனியையும் ஆரம்பித்தார். “சினிமா எடுக்க நான் ஹெல்ப் பண்றேன்” என சோனாவுக்கு கொக்கி போட்டு என்ட்ரியானார் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி. சிவா.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

ஜெய் ஹீரோவாக நடிக்க, 2010-ல் ‘கனிமொழி’ என்ற படம் ஆரம்பிக்கப்பட்டது. பணம் மொத்தமும் சோனா வுடையது என்றாலும் தனது ‘அம்மா கிரியேஷன்’ பேனரையும் ஜாயிண்ட் பண்ணினார் டி.சிவா. படம் ரிலீஸ் ஆச்சு, படு ஃப்ளாப்பாகிப் போச்சு. சோனாவின் காசு போச்சு, ஆனா டி.சிவாவுக்கு நல்ல கலெக்ஷன் ஆகிப் போச்சு. சோனா தமிழ்ஃபீல்டில் இருக்கும் போது ஏதாவது ஒரு ஸ்டார் ஓட்டலில் வீக் எண்ட் `சரக்கு பார்ட்டியில் கலந்து கொள்வார்.

டைரக்டர் வெங்கட்பிரபு, இவருடைய தம்பி பிரேம்ஜி, நடிகர்கள் சிம்பு, ஜெய், வைபவ், தயாரிப்பாளர் டி. சிவா இவர்கள் அனைவருமே சோனாவுக்கு நெருக்கமான ‘கிளாஸ் மேட்ஸ்’, ரவுண்ட் கட்டி அடிப்பார்கள். அதிலும் பிரேம்ஜி சோனா மீது ரொம்பவே அஃபெக்ஷன் ஆகி, கல்யாணம் பண்ணும் அளவுக்கு கிறுகிறுத்துப் போய்க் கிடந்தார். ‘நமக்கு இவர் தான் சேஃப்’ என நினைத்த சோனாவும் ‘கனிமொழி’ படம் கவுத்திய பிறகும் பிரேம்ஜியை ஹீரோவாகப் போட்டு அடுத்த படத்தை ஆரம்பித்தார்.

 வெங்கட் பிரபு - பிரேம்ஜி
வெங்கட் பிரபு – பிரேம்ஜி

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சமீபத்தில் ரிலீசான, இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ படத்தை எடுத்த ஸ்ரீபதி தான் [அப்போது இவருடைய பெயர் ஸ்ரீபதிரங்கசாமி] கனிமொழியின் டைரக்டர். இவரிடம் தான் பிரேம்ஜி ஹீரோவாக நடிக்கும் படத்தின் தயாரிப்பு பொறுப்பை ஒப்ப டைத்தார் நடிகை சோனா.

ஆனால் ஸ்ரீபதியின் சேட்டை களால் படம் பாதியிலேயே படுத்துவிட்டது. நான்கு கோடி ரூபாய் கடனாளியானாலும் பிரேம்ஜி மீதான காதலை கைவிட வில்லை சோனா, ஆனால் டி.சிவாவின் ஐடியாவால் டிராக் மாறிய பிரேம்ஜி சோனாவை கைகழுவினார்.

நடிகர் சிம்பு - ஜெய்
நடிகர் சிம்பு – ஜெய்

இதனால் வெக்ஸ் ஆகிப் போன சோனா, ‘மிக்ஸிங்’ இல்லாமலேயே சரக்குக்கு அடிமையாகிப் போனார். இந்த ‘கேப்’ பில் தான் ஆஜானுபாகுவான ஃபைனான்ஸ் பார்ட்டி ஒருத்தன் ”நான் உனக்கு வாழ்க்கை கொடுக்குறேன்” என வாக்கு கொடுத்து எண்ட்ரியானான். அவனும் கொஞ்ச காலம் முடிந்த வரை ‘இருந்துவிட்டு’… கம்பி நீட்டிவிட்டான். இதனால் மனம் நொறுங்கிப் போன சோனா தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்தார்.

'ஸ்மோக்' புதிய பட தொடக்க விழாவின்போது நடிகை சோனாவுடன் படக்குழுவினர்
‘ஸ்மோக்’ புதிய பட தொடக்க விழாவின் போது நடிகை சோனாவுடன் படக்குழுவினர்

சில வருடங்கள் மலேசியாவில் தங்கியிருந்து சினிமா டைரக்ஷன் மற்றும் தொழில் நுட்பங்கள் குறித்து கற்றுத் தேர்ந்த பிறகு சென்னை திரும்பினார். இப்போது ஷார்ட் ஃபிளிக்ஸ் ஓடிடி பிளாட் பார் முக்காக தனது யுனிக் புரொடக்ஷன் பேனரில் “ஸ்மோக்” என்ற வெப் சீரிஸை சோனா ஹெய்டன் டைரக்க்ஷன் பண்ண களம் இறங்கிவிட்டார்.

“இந்த வெப் சீரிஸை எத்தனை எபிசோட் எடுக்குறதுன்னு இன்னும் முடிவு பண்ணல. ஆனா நான் எடுக்கப் போகும் ”ஸ்மோக்” கில் 99% உண்மை இருக்கும். என்னை சீட்டிங் பண்ணி டேட்டிங்’ பண்ணியவர்களுக்கு ஸ்நேக்’ கொத்துன மாதிரி இருக்கும்” என்ற அதிரடியுடன் ஷூட்டிங்கை ஆரம்பித்துவிட்டார் சோனாஹெய்டன்.

இதனால் நாம் செய்தியில் குறிப்பிட்டுள்ள தமிழ் சினிமா வி.ஐ.பி.கள் தவிர தெலுங்கு, மலையாள சினிமா வி.ஐ.பி.களும், சில அரசியல் வி.ஐ.பி.களும் இப்போதே பேரத்தை ‘ஸ்டார்ட் ‘ பண்ணிவிட்டார்களாம். ‘ஸ்மோக்’ புகைச்சலைக் கிளப்புமா? புஸ்ஸுன்னு போகுமா? 

-மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.