அங்குசம் பார்வையில் ‘கண்ணகி’ படம் எப்படி இருக்கு ! .. .

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அங்குசம் பார்வையில் ‘கண்ணகி’ படம் எப்படி இருக்கு ! .. .

தயாரிப்பு: ஸ்கைமூன் எண்டெர்டெயின்மெண்ட் & E5 எண்டெர்டெய்ன்மெண்ட் எம்.கணேஷ்& ஜே.தனுஷ். தமிழக ரிலீஸ்: ‘சக்தி பிலிம் ஃபேக்ட்ரி’ சக்திவேலன். டைரக்டர்: யஷ்வந்த் கிஷோர் . ஆர்ட்டிஸ்ட்ஸ்: கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், அம்மு அபிராமி, ஷாலின் ஜோயா.மயில்சாமி, மெளனிகா, ஆதேஷ் சுதாகர், யஷ்வந்த் கிஷோர் ஒளிப்பதிவு: ராம்ஜி, இசை: ஷான் ரஹ்மான், எடிட்டிங்: கே.சரத்குமார், ஆர்ட் டைரக்டர்: குமார் கங்கப்பன். பிஆர்ஓ. ரியாஸ் கே.அஹமத்

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

டைட்டிலைப் பார்த்ததும் இது கணவனின் சாவுக்கு நீதி கேட்டு மதுரையை எரித்த கண்ணகி மாதிரி தங்களுக்கு நீதி கேட்டு போராடும் பெண்களின் கதையாக இருக்குமோன்னு நீங்க நினைச்சா அதுக்கு நாங்க பொறுப்பில்லை. இன்னும் சொல்லப் போனால் டைரக்டரும் பொறுப்பில்லை. மொதல்ல கதை என்னன்னு பார்த்துட்டு அப்புறம் டைட்டில் பஞ்சாயத்துக்கு வருவோம்.

அம்மு அபிராமியின் அப்பா-அம்மா மயில்சாமி, மெளனிகா. பெரிய இடத்துல வசதியான இடத்துல தான் தன்னோட மகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே வருகிற மாப்பிள்ளைகளையெல்லாம் தட்டிக் கழிக்கிறார் மெளனிகா. இந்தக் கதை பொள்ளாச்சியில் நடக்குது. சினிமா டைரக்டர் கனவுடன் தயாரிப்பாளர்களிடம் கதை சொல்கிறார் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருக்கும் யஷ்வந்த் கிஷோர்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

கல்யாணம் செய்து கொள்ளாமலே நான்கு மாத கர்ப்பமாக இருக்கிறார் யஷ்வந்த் கிஷோரின் காதலி கீர்த்தி பாண்டியன். இந்தக் கதை சென்னையில் நடக்குது.  குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பில்லாததால் வித்யா பிரதீப்பிடமிருந்து விவாகரத்து கேட்கிறார் அவர் கணவர். இதற்கு ஆலோசனை கேட்பதற்காக வக்கீல் ஆதேஷ் சுதாகரைத் தேடி வருகிறார் வித்யா பிரதீப்.  இந்தக் கதை கோயம்புத்தூர்ல நடக்குது.

கண்ணகி' படம்
கண்ணகி’ படம்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கல்யாணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழலாம், ‘படுக்கையையும் ஷேர் ‘ பண்ணிக்கலாம் என்ற ஹைடெக் பாலிஸியுடன் வெற்றியுடன் ஜாயிண்ட் அடிக்கிறார் ஷாலின் ஜோயா. இருவரும் எந்நேரமும் சரக்கும் தம்முமாக கும்மியடிக்கிறார்கள். இந்தக் கதை சென்னையில் நடக்குதா? பெங்களூருவில் நடக்குதான்னு நமக்கு புரியல. இப்படி நான்கு விதமான பெண் கதாபாத்திரங்கள், அவர்களின் வாழ்க்கை கஷ்டங்கள் இவற்றை க்ளைமாக்ஸுக்கு பதினைந்து நிமிடங்கள் முன்பாக வரை தனித்தனியே காட்டி நீட்டி முழக்கிக் கொண்டே போகிறார் டைரக்டர் யஷ்வந்த் கிஷோர்.

இதெல்லாம் சிறுகதைக்கோ, நாவலுக்கோ தானே சரிப்படும்.  இந்த நான்கு கேரக்டர்களையும் ஏதோ ஒரு மையப்புள்ளியில் இணைப்பது தானே சினிமா. சரி க்ளைமாக்ஸ்ல  டைரக்டர் இணைப்பார்னு க்ளைமாக்ஸ் வரைக்கும் நாமளும் உட்கார்ந்திருந்தோம். ஆனா க்ளைமாக்ஸ்ல வச்சாரு பாருங்க ஒரு ட்விஸ்ட், டோட்டல் கன்ஃபியூஸ்.

இதுக்கு ஏய்யா இரண்டு மணி நேரம் முப்பத்தேழு நிமிடம் இழுஇழுன்னு இழுத்தீக? நான்கு ஹீரோயின்களும் நடிப்பில் நல்ல ஸ்கோர் பண்ணியிருகக்கிறார்கள். கர்ப்பிணியான கீர்த்தி பாண்டியன் ஏன் சைக்கோ மாதிரி இருக்கார்னு தெரியல.

அதேபோல் ஆதேஷ் சுதாகர், யஷ்வந்த் கிஷோர், வெற்றி ஆகியோரும் குறை சொல்ல முடியாதபடி ஸ்கோர் பண்ணியிருக்கிறார்கள். தள்ளாடும் திரைக்கதையால டெக்னீஷியன்கள் திணறியிருக்கிறார்கள். எடிட்டர் தான் பெரும்பாடு பட்ருப்பார். ‘கண்ணகி’ இதை ஆங்கிலத்தில் எழுதினா KANNAGI. இது தெரியாதாய்யா எங்களுக்குன்னு கடுப்பாகி கட் பண்ணிராதீக.

KA ன்னா கலை, N ன்னா நேத்ரா, அதுக்கடுத்த N ன்னா நதி. இதுவரை ஓகே. அதுக்கடுத்து Gi க்கு கீதான்னு டைரக்டர் சொல்றாரு.  இத நாம எந்த வகையில் சேர்ப்பதுன்னு தான் புரியல, தெரியல.

-மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.