அங்குசம் சேனலில் இணைய

தமிழுக்கு முதன்மை பயணக்குழுவிற்கு கருவூர்திருக்குறள் பேரவை வரவேற்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழுக்கு முதன்மை பயணக்குழுவிற்கு கருவூர்திருக்குறள் பேரவை வரவேற்பு ! தமிழுறவுப் பெருமன்றத் தலைவர் பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன் ஐயாவின் 32 ஆவது தமிழுக்கு முதன்மை கலைஞர் நூற்றாண்டு பரப்புரை பயணக்குழுவிற்கு கருவூர் திருக்குறள் பேரவை, தமிழ் அமைப்புகள் சார்பில் செயலாளர் மேலை பழநியப்பன் தலைமையில் வரவேற்புக் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து கருவூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் அவர்களும் வா மு. சேதுராமன் ஐயாவும் சங்க காலப் புலவர்கள் நினைவுத்தூணிற்கு மாலை அணிவித்து எங்கும் தமிழ் , எதிலும் தமிழ் , ஆட்சி மொழியாக , ஆலயமொழியாக , வழக்காடு நீதிமொழியாக தமிழ் வணிக நிறுவன பெயர்ப்பலகைகளில் தமிழ் , அஞ்சலக படிவங்கள் தமிழில் தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை முழக்கங்கள் முழங்கினர்.

தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கை முத்தமிழறிஞர் கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து மேயர் துவக்க உரை ஆற்றினார் உரையில் கலைஞரின் தளபதியின் தமிழ்ப் பணிகளையும் அதற்கு ஏற்படும் நடைகளையும் எடுத்துரைத்தார். கலைஞர் நூற்றாண்டையொட்டி
முனைவர் அருணா பொன்னுசாமி , முனைவர் கடவூர் மணிமாறன் , முனைவர் கருவூர் கன்னல் , பாவலர் எழில்வாணன் , கவிஞர் அழகரசன் பரமத்தி வ சரவணன் உள்ளிட்ட பலர் கவிதை பாடினர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Welcome to Thirukkural Assembly
Welcome to Thirukkural Assembly

தொடர்ந்து தலைவர் ப.தங்கராசு உரையில் அரசின் தமிழ்ப்பணிகளை பாராட்டினார். தொடர்ந்து உரையாற்றிய பெருங்கவிக்கோ எங்கும் தமிழ் . எதிலும் தமிழ் செயல்பட துவங்கியிருக்கிறது.  அரசொடு அமைப்புகளும் , வணிகர்களும் , மக்களும் மேலை நாட்டு மக்களின் மொழியுணர்வை பின்பற்றினால் விரைவில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் நடைமுறைக்கு வரும் என்றார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

சுற்றுச்சூழல் போற்றும் ஆட்டோ ஓட்டுனர் சத்திய மூர்த்தி , இலக்கியப் பணிப் பணிக்காக இலக்கியதாகம் இதழ் ஆசிரியர் ஆகியோருக்கு மேயர் கவிதா கணேசன் பாராட்டு விருது வழங்கினார். பேங் பாலகிருஷ்ணன் , கவிஞர் கோ.செல்வம் பி.கே.எஸ். லயன் ரமணன் , ராமசாமி பொன்னி சண்முகம் அகல்யா மெய்யப்பன் ஜெயா பொன்னுவேல் , பாலமுருகன் ரவிக்குமார் , சிவராமன் , வையாபுரி, வைஷ்ணவி மெய்யப்பன் , உட்பட பலர் பங்கேற்றனர் . க.பா.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.