அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

‘ ரெக்கார்ட் பிரேக்’ சினிமா சங்கிகளின் சினிமாவா ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க

Record Break Movie
Record Break Movie

‘ ரெக்கார்ட் பிரேக்’ சினிமா சங்கிகளின் சினிமாவா?  ஸ்ரீ திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் தயாரிப்பில் , தெலுங்கு சீனியர் நடிகையான ஜெயசுதா வின் மகன் நிஹார், நாகர்ஜூனா( இவர் புது நாகர்ஜுனா)ராக்தா இஃப்திகர் நடித்திருக்கும் படம் ‘ரெக்கார்ட் பிரேக்’. மார்ச் 8 அன்று இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் நாகர்ஜூனா, “இது எனக்கு முதல் படம். இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் என்ற நம்பிக்கை உண்டு. படம் பார்த்து நிச்சயம் மகிழ்வீர்கள்” என்றார்.

இந்த வார JANUARY 15 - 21 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

நடிகர் நிஹார், “இது என்னுடைய இரண்டாவது படம். கடந்த ஐந்து வருடங்களாக இந்த படத்திற்காக நாங்கள் கடுமையாக உழைத்து உள்ளோம். விஎப்எக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்தப் படத்தைபா பார்க்க வேண்டும் என விரும்புகிறோம். அதனால் தான் தெலுங்கு உட்பட எட்டு மொழிகளில் இந்த படத்தை டப்பிங் செய்திருக்கிறோம். பெரிய திரையில் பார்க்கும்பொழுது அதன் அனுபவத்தை உங்களால் உணர முடியும். யாரும் இல்லாதவர்களுக்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்தால் நிச்சயமாக அவர்களால் சாதிக்க முடியும் என்பதை இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். உங்களுக்கும் படம் பிடிக்கும்”.

Record Break Movie
Record Break Movie

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

நடிகை ராக்தா, ” நான் முதல் முறையாக சென்னைக்கு வந்து இருக்கிறேன். இந்த படம் ஒரு சிறந்த கருத்தை பேசி இருக்கிறது. தெலுங்கு பார்வையாளர்கள், தமிழ் பார்வையாளர்கள் என இல்லாமல் எல்லோருக்குமான பான் இந்தியா படமாக இது உருவாகி இருக்கிறது. நீங்கள் எல்லோரும் இந்த படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்”

நடிகை சத்யா, “எட்டு வெவ்வேறு மொழிகளில் இந்தப் படத்தை டப் செய்திருக்கிறோம். ரொம்ப வித்தியாசமான கதை இதில் உள்ளது. நீங்கள் நிச்சயம் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும். உங்கள் ஆதரவு எங்களுக்கு வேண்டும்”. தயாரிப்பாளர்& நடிகர் பிரசன்னா, “பெண்களுக்கு வலுவான கன்டென்ட் இந்த படத்தில் உள்ளது. அம்மா செண்டிமெட்ண்ட் மற்றும் விவசாயிகள் பிரச்சினையும் இதில் பேசப்பட்டுள்ளது. ரெஸ்லிங்கில் எப்படி ஹீரோ போட்டிப் போட்டு எதிர்நாடான சீனா, பாகிஸ்தானை ஜெயிக்கிறான் என்பதுதான் ‘ரெக்கார்ட் பிரேக்’. படம் நிச்சயம் ஹிட் ஆகும்”. என்றார் .

பிலிம் சேம்பர் பிரசாத் பேசும் போது, “ஸ்ரீனிவாஸ் சார் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவக்கூடிய நல்ல உள்ளம் கொண்டவர். கொரோனா சமயத்தில் திரைத்துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஏராள உதவிகள் செய்தார். ‘பிச்சைக்காரன்’ படம் வெளியான சமயத்தில் விஜய் ஆண்டனிக்கு தெலுங்கில் பெரிதாக மார்க்கெட் இல்லை. ஆனால், கதை மீது நம்பிக்கை கொண்டு ‘பிச்சக்காடு’ என பெயர் வைத்து அங்கு வெளியிட்டார். படம் தமிழை விட தெலுங்கில்தான் சூப்பர் ஹிட் ஆனது. அதேபோல, ‘ஹனுமன்’ படமும் 20-30 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு பல மொழிகளிலும் சேர்த்து ரூ. 500 கோடி வசூல் செய்தது. அதேபோல தான் இந்தப் படத்தின் கதை மீதும் நம்பிக்கை வைத்து எட்டு மொழிகளில் உலகம் முழுவதும் மார்ச் 8 அன்று வெளியிடுகிறோம். படம் நிச்சயம் வெற்றி பெறும்”. என்றார் ‌

இயக்குநர், தயாரிப்பாளர் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் பேசியதாவது, “சென்னை விஜயா கார்டனில்தான் எனது சினிமா வாழ்க்கைதொடங்கியது. யாரும் இல்லாத கதாநாயகன் சிறுவயதிலிருந்து கிடைக்கும் வேலைகளை கஷ்டப்பட்டு செய்து வருகிறான். ஆனால், அவன் வளர்ந்து ஒரு விளையாட்டு ஆர்வத்துடன் போகும் பொழுது என்ன நடக்கிறது என்பதுதான் கதை. மனிதர்களாக நாம் அனைவரும் இங்கு சமம். படத்தின் கதை மீது எனக்குப் பெரிய நம்பிக்கை உண்டு. அதை நீங்கள் திரையரங்குகளில் பார்க்கும்போது உணர்வீர்கள். இந்தப்படத்தை எனக்குப் பிடித்த தமிழ் மக்களுக்கும் காட்டுவது ரொம்ப சந்தோஷம்” என்றார். தெலுங்குப்படங்களான ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘ஹனு-மான்’ ‘ரஜாக்கர்’ வரிசையில் இந்த ‘ரெக்கார்ட் பிரேக்கர் ‘ படமும் கண்டிப்பாக சங்கிகளின் சினிமாவாகத் தான் இருக்கும் என்பதை டிரெய்லர் பாரத்து தெரிந்து புரிந்து அறிந்தோம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.