தேனியில் டிடிவி தினகரன் – இராமநாதபுரத்தில் சுயேட்சையாக ஓபிஎஸ் !
தமிழ்நாட்டில் காமராசருக்குப் பிறகு முதல் அமைச்சர் பதவி வகித்தப் பின் எம்.பி. தேர்தலில் போட்டியிடும் இரண்டாவது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.
தேனியில் டிடிவி தினகரன் – இராமநாதபுரத்தில் சுயேட்சையாக ஓபிஎஸ் !
பாஜக கூட்டணியில் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சிக்கு தேனி மற்றும் திருச்சி தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அந்தத் தொகுதிக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
தேனி – டிடிவி தினகரன்
திருச்சி – செந்தில்நாதன்
தேனி தொகுதியில் அமமுக கட்சியில் அறிவிக்கப்பட்டுள்ள டிடிவி தினகரன் இந்தத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தகுந்தது. முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா தன்னை அரசியலுக்கு அறிமுகப்படுத்திய அதே தேனித் தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று அறிவித்துள்ளது.
திருச்சி தொகுதிக்கு அமமுக முன்னணித் தலைவர் புதுக்கோட்டை மன்னர் பரம்பரையைச் சார்ந்த சாருபாலா தொண்டைமான் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் திருச்சி மேயராகவும் இருந்தவர். மேலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் பா.குமார் அவர்களிடம் மிககுறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர். இந்நிலையில், திருச்சி தொகுதிக்கு செந்தில்நாதன் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் திருச்சி மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட தன் மாமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். விலகல் கடிதத்தை திருச்சி மேயர் அன்பழகனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இணைந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்திற்கு இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் தாமரை சின்னத்தில் போட்டியிட மறுத்து, சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகின்றார். இன்று (25.03.2024) வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதிமுக பொதுச்செயலாளர் தூண்டுதலின் பேரில், உசிலம்பட்டியைச் சார்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்ட இன்னொருவரைப் பிடித்து, இராமநாதபுரத்தில் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் சொல்லப்படுகின்றது. தமிழ்நாட்டில் காமராசருக்குப் பிறகு முதல் அமைச்சர் பதவி வகித்தப் பின் எம்.பி. தேர்தலில் போட்டியிடும் இரண்டாவது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.
ஆதவன்