மோடிக்காக கூவும் ஃபாரின் கூலிப்படைகள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மோடிக்காக கூவும் ஃபாரின் கூலிப்படைகள் !  நம்ம நாட்டின் அருணாசலப்பிரதேசத்தின் பல பகுதிகளை சீனாவுக்குத் தாரை வார்த்துவிட்டது ஆப் ஹி மோடி சர்க்கார். அந்தப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகளைக் கட்டி, சீனர்களைக் குடியமர்த்தி, சீனப்பெயர்களையும் வைத்துவிட்டது சீன அரசாங்கம். இந்தியப் பகுதிகளை தாரை வார்த்துக் கொடுத்ததற்காகவே ‘பி.எம்.கேர் ஃபண்ட்’டுக்கு கோடிக்கணக்கில் வாரி வழங்கியது சீனா. ”உலகில் மோடியைப் போல பிரதமர் உண்டோ? அவரு வல்லவரு, நல்லவரு, தீர்க்கதரிசி” என சீன அரசாங்கத்தின் ஆதரவுப் பத்திரிகைகள் அளவுக்கதிகமாகவே கூவின.

இப்ப லேட்டஸ்டா.. அமெரிக்காவுல ஃபைனான்ஸ் கம்பெனி ஓனர் ஒருத்தன் கூவியிருக்கான் பாருங்க. அடேங்கப்பா.. பிஜேபிகாரனெல்லாம் இவனிடம் ட்ரெய்னிங் எடுக்கணும் போல.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

மோடி - ஜேமி டைமன்
மோடி – ஜேமி டைமன்

நம்ம கிராமத்துப் பக்கம் வட்டிக்காரன், கந்துவட்டிக்காரன்னு சொல்லுவோம். நகரத்துப்பக்கம் சீட்டுக் கம்பெனி, அடகுக்கடை, வட்டிக்கடைன்னு சொல்லுவோம். அதையே மாநகரங்களில் ’பின்கார்ப்’ ஃபைனான்ஸ் கன்ஸ்டல்ன்ஸி, ஃபைனான்ஸ் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன்னு இங்கிலீஷல அடிச்சுவிடுவாய்ங்க. தமிழ்ல சொன்னாலும் சரி, இங்கிலீஷ்ல சொன்னாலும் சரி, இல்ல எந்த லாங்குவேஜ்ல சொன்னாலும் சரி, எல்லாமே இல்லீகல் தான், டுபாக்கூர் தான், ஃபோர்ஜரி தான்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அமெரிக்காவில் இந்த லிஸ்ட்டில் இருக்கும் ஃபைனான்ஸ் கம்பெனியின் தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பவன் ஜேமி டைமன். இந்தப் பேரை வாசித்ததும் ஏதோ அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரேஞ்சுக்கு கற்பனை பண்ணாதீகப்பு. எல்லா ஊர்லயும் எல்லா நாட்லயும் சீட்டிங் பார்ட்டிகள் இருப்பது மாதிரி தான் அமெரிக்காவிலும் சீட்டிங் பார்ட்டிகள் இருப்பார்கள்.

அமரிக்காவின் நியூயார்க் நகரில் பொருளாதார மாநாடு ஒண்ணு நடந்துச்சாம். அதுல பேசுன இந்த ஜேமி டைமன், “இந்தியாவில் நம்ப முடியாத கல்வி முறையையும் அடிப்படைக் கட்டமைப்பையும் மோடி செய்திருக்கிறார். இந்தியாவில் 70 கோடி பேரை வங்கிக் கணக்கு தொடங்க வைத்திருக்கிறார். 40 கோடி பேரை வறுமையிலிருந்து மீட்டிருக்கிறார். மோடி இந்தியாவில் செய்த நல்லவைகளில் பாதியையாவது அமெரிக்க அதிபர் செய்ய வேண்டும்” என வாங்குன காசுக்கு வஞ்சனை இல்லாமல் கூவியிருக்கான் ஜேமி டைமன். அமெரிக்காவையும் அந்நாட்டின் அதிபரையும் இதைவிட எவனும் கேவலப்படுத்த முடியாது.

70 கோடிப் பேரை வங்கிக் கணக்கு தொடங்க வைத்து எத்தனை ஆயிரம் கோடியை சூறையாடினார் மோடி, புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் எத்தனை லட்சம் ஏழை—எளிய மாணவ—மாணவிகளின் வாழ்க்கையில் விளையாடியிருக்கிறார் மோடி,  மிகமிகச் சிறிய நாடான பூட்டானைவிட பட்டினிக் குறியீட்டில் மோடி ஆட்சியில்  இந்தியா மிகவும் கீழான நிலையில் இருக்கும் கேவலம், இதெல்லாம் கூலிக்கு கூவும் ஜேமி டைமன் போன்ற மெண்டல்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

மே.30 ஆம் தேதிக்குள் ஜெர்மன், இத்தாலி, இங்கிலாந்து, போன்ற நாடுகளிலிருந்து, இன்னும் சொல்லப் போனால் ஐ.நா.சபையிருந்து கூட இது போன்ற கூலிக் கூவல்கள் சத்தம் அதிகமாகக் கேட்கலாம்.   இந்தியர்கள் ஜாக்கிரதை..

-கரிகாலன்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.