தாத்தாவுக்கும் கொலை மிரட்டல்…. சொத்துக்காக தந்தை மீது கொலைவெறி தாக்குதல்  மகன் மீது தொடரும்  குற்றச்சாட்டு.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தாத்தாவுக்கும் கொலை மிரட்டல்…. சொத்துக்காக தந்தை மீது கொலைவெறி தாக்குதல்  மகன் மீது தொடரும்  குற்றச்சாட்டு. சொத்தை பிரித்து தராத தந்தை மீது கொடூர தாக்குதல் நடத்திய மகனான பெரம்பலூர்  கிருஸ்ணாபுரத்தைச் சேர்ந்த  சக்திவேல் மீது குற்றசாட்டுகள் தொடர்கின்றன.

பெரம்பலூர் மாவட்டம். வேப்பந்தட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசித்தவர் தொழிலதிபர் குழந்தைவேல்  அவரிடம் அவரது மகன் சக்திவேல் என்கிற சந்தோஷ் சொத்தை பிரித்து தருமாறு கேட்டு, தகராறு செய்து கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி கொடூரமாக தாக்கியதாக தெரிகிறது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த குழந்தைவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளார். இந்த கொடூர தாக்குதல் குறித்து குழந்தைவேல் கை.களத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த வழக்கில் கைகளத்தூர் போலீஸார் முதல் தகவலறிக்கை பதிவு செய்யவில்லை. பேச்சுவார்த்தையில் தந்தையும்- மகனும் சமரசமானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 18ம் தேதி படுக்கை அறையில் இறந்த செய்துள்ளார். நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இந்நிலையில் தான்  தாக்குதல் சம்பவத்தின் போது பதிவான சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சக்திவேல் என்கிற சந்தோஷ் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கை.களத்தூர் போலீசாரால் கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பெரம்பலூர் அடுத்த வேப்பந்தட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பிணை கேட்டு சக்திவேல்  மனு தாக்கல்  ஜாமீன் மனு மீதான விசாரணை திங்கள் கிழமை நடக்க உள்ளது.

தாக்குதலுக்கு காரணம் இதுதான்

கைது செய்யப்பட்டுள்ள சக்திவேல் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள அவரது குடும்பத்திற்கு சொந்தமான தொழிற்சாலையை நிர்வகித்து வந்தார் என்றும், கடந்த ஐந்து வருடங்களாக தொழிற்சாலை நடத்தி வரும் சக்திவேல் சில பல காரணங்களால் தொழிற்சாலையில் தொழில் நஷ்டம் ஏற்பட்டதாகவும்,  இதனால் அவர்  கடுமையான பணம் நெருக்கடிக்கு ஆளானதால் சொத்தை தனக்கு எழுதி தரக் கூறியதாகவும், மகனின் பொறுப்பற்ற  நிர்வாகத்தால் தொழிற்சாலை நஷ்டத்திற்கு சென்றதால் அவர்கள் தந்தை குழந்தைவேல் கிருஷ்ணாபுரத்தில் தான் நிர்வகித்து வந்த தொழிற்சாலை தங்களின் குடும்ப உறவினர்களின் பங்கு இருப்பதால் அதனை எழுதி தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது இதனால் கோபமடைந்த சக்திவேல் தந்தையை கொடூரமாக தாக்குதல் நடத்தியது போலீசார் விசாரணையில் தெரிய வருகிறது.

நடவடிக்கை எடுக்காத காவல் உதவி ஆய்வாளர் மாற்றம்

தொழிலதிபர் குழந்தைவேல் தன்னை தாக்கியது தொடர்பாக கைகளத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாத காவல் உதவி ஆய்வாளர் பழனிச்சாமி என்பவரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும் காவல் உதவி ஆய்வாளர் பழனிச்சாமி மீது விவகாரம் தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

அதிரவைக்கும் அடுத்த புகார்

இதனிடையே, இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சக்திவேலுக்கு எதிராக  இறந்து போன குழந்தைவேலுவின் தந்தை அத்தியப்ப கவுண்டர் நேற்று முன் தினம் கைகளத்தூர் காவல் நிலையத்தில் புகார்  அளித்துள்ளார்.

அந்த புகாரில், தனது தந்தை குழந்தைவேல், இறந்துவிட்ட நிலையில் மொத்த சொத்துக்கும் தான் ஒரே வாரிசு என்றும் சொத்தைப் பிரித்து தரவில்லை என்றால் தன்னை கொலை செய்து விடுவதாக சக்திவேல் தன்னை மிரட்டியதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இரக்கமில்லாத மகன்… மரணத்திலும் காப்பாற்றிய தந்தை.

போலீஸார் விசாரணையில், சிசிடிவி கேமரா பதிவுகளில் சக்திவேல் அவரது தந்தை குழந்தைவேலுவை கொடூரமாக தாக்குதல் நடத்தியது அம்பலமாகிறது. இதில் அவரது முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார்.

அந்த நிலையிலும் தனது மகன் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து விடக்கூடாது என்று இரக்கப்பட்டு வழக்கை வாபஸ் பெறுவதாக எழுதிக் கொடுத்ததாக  கூறப்படுகிறது.

தனது ஒரே மகன் இரக்கமில்லாமல் தன்னை தாக்கியதை எண்ணி அதன் பிறகு குழந்தைவேலு வீட்டுக்குள்ளையே முடங்கிக் கிடந்ததாகவும் இந்நிலையில்தான் அவர் உடலாலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டு மரணமடைந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வருகிறது.

முதல் தாக்குதல் முழுக்கட்டுரை

தந்தையின் முகத்தில்  பாக்ஸிங்…. மகனால் நேர்ந்த கொடூரம் – சேலம் தொழிலதிபர் கைது? வீடியோ

 

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ களாலும், சொத்துக்காக தாத்தா மற்றும் தந்தை மீது தாக்குதல் நடத்திய இந்த சம்பவத்தால் பெரம்பலூர் பெரும் பரபரப்பாகியுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.