பங்கு பிரிப்பதில் மோதல்கள் ! தெருவுக்கு வந்த அப்ரசின்டிஸ்கள் !

0

பங்கு பிரிப்பதில் மோதல்கள் ! தெருவுக்கு வந்த அப்ரசின்டிஸ்கள்! தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் தங்களது செல்வாக்கை காட்ட  மண்டல குழு தலைவர்களுக்கு லட்சக்கணக்கான பணத்தை வாரி வழங்கியதாம்  மேலிட தலைமை ,  அதில்  ஒவ்வொரு மண்டல குழு  தலைவர்களும் ரூ 2 லட்சம் வரை கையாடல் செய்துள்ளார்கள் என்றும் , அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தலா  70 பூத்துகளுக்கு வெறும் டீ செலவுக்கு மட்டுமே பணம் கொடுத்துவிட்டு மீதியை சுருட்டிக்கொண்டனர்  எனவும் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பணம் தரவில்லை என கூறி  நிர்வாகிகளுக்கு எதிராக  போஸ்டர் அடித்தும் , வீதியில் இறங்கி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டும் ,  பண மோசடி குறித்து ஆடியோக்களை   சமூக வலைதளங்களில்  வெளியீட்டும் தங்களது  எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் , மாநில தலைவர் முதல் தேர்தல் பூத் ஏஜெண்ட்கள் வரை தேர்தல் அனுபவமில்லாதவர்கள் இவர்கள் அதாவது பதியதாக வேலைக்கு வந்த அப்ரசின்டிஸ்கள்  என்றும் , தேர்தல் பத்திரம் முறைகேடு பணத்தை,  பங்கு பிரிக்கும் தகராறில் தற்போது பாஜக அப்ரசின்டிஸ்கள் வீதிக்கு வந்துவிட்டார்கள் என எதிர்கட்சிகள் கிண்டலடித்து வருகிறார்கள்.

மோதல்
மோதல்

வேலூர் :

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ,

- Advertisement -

- Advertisement -

வட சென்னை  :

ஒரு பூத்துக்கு மேலிடம் 8 சுவீட் பாக்ஸ் வழங்கியது, அதில் 5 சுவீட் பாக்ஸ் மட்டுமே மண்டல் தலைவர்கள் செலவு செய்தார்கள். மீதி ரூ.3 சுவீட் பாக்ஸை அவர்கள் எடுத்து விட்டார்கள், ஒரு மண்டல தலைவருக்கு குறைந்த பட்சம் 70 பூத்துகள் வரை வருகிறது அப்படி இருக்க ரூ.2 லட்சம் வரை ஒவ்வொரு மண்டல தலைவர்களும் கையாடல் செய்துள்ளார்கள் வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் தெற்கு மண்டல் தலைவர் பிரபா பெரம்பூர் மத்திய மண்டல தலைவர் கஸ்தூரி திரு.வி.க நகர் மண்டல தலைவர் முரளி ஆகியோருக்கு எதிராகவும்  பெரம்பூர் தெற்கு மண்டல பகுதியைச் சேர்ந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர்  கடம்பூர் வேல்ராஜ்எங்களுக்கு முறையான உணவு வழங்கவில்லை.  பிரியாணி சரியில்லை என மண்டல் தலைவரிடம் போய் சொன்னால் அவர் சிரித்துக் கொண்டே அப்படியா சந்தோஷம் எனக் கூறுகிறார்.

பிரசாரத்திற்கு வந்தவர்களுக்கு பணம் கொடுத்தார்களா என கேட்டால் அது பற்றி பேச மறுக்கிறார். கட்சியில் இவ்வளவு நாட்களாக உழைத்தவர்களுக்கு எதுவும் வரவில்லை, ஒவ்வொரு மண்டலத்திலும் மண்டல தலைவர்கள் பணத்தை அதிகமாக கையாடல் செய்துள்ளார்கள் இதுபோன்று ஒவ்வொரு மண்டல பகுதியிலும் கட்சி நிர்வாகிகள் தங்களது ஆதங்கங்களை ஆடியோவாக பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

தென் சென்னை :

ஏப்ரல் 26 ,தென் சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலாளர் முத்துமாணிக்கம்,  பா.ஜ.க. பூத் ஏஜெண்ட்டாக பணியாற்றிய டீக்காராம், வெங்கட், மாரியம்மாள் உள்ளிட்ட 5 பேருக்கு பணம்  தரவில்லை என இவர் மீது புகார் வெடித்தது
பணம் பிரித்து தராதது தொர்பாக கடந்த 20-ம் தேதி மேட்டுக்குப்பத்தில் பா.ஜ.க. மண்டல தலைவர்
ஜெகநாதன் வீட்டில் கட்சியினரிடையே நடந்த தகராறில் முத்துமானிக்கத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவாகியுள்ளது.

பங்கு பிரிப்பதில் மோதல்கள் ! தெருவுக்கு வந்த அப்ரசின்டிஸ்கள்!
பங்கு பிரிப்பதில் மோதல்கள் ! தெருவுக்கு வந்த அப்ரசின்டிஸ்கள்!

புதுச்சேரி :

புதுச்சேரி மாநிலத்திலுள்ள பாஜக அலுவலக வாசலில் பாஜக – ஐஜேகே கட்சிகளுக்கு இடையே பணப்பட்டுவாடா செய்யும் பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

4 bismi svs

ராமநாதபுரம் :

பரமக்குடியில் பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா ரோடு ஷோ நடத்தியதால் இரவு நேரத்தில் உப்பூர், திருப்பாலைக்குடி பகுதிக்கு ஓபிஎஸ் சென்றார். அப்போது அப்பகுதியின் ஓபிஎஸ் அணி ஒன்றிய செயலாளர் முத்துமுருகன், ஓபிஎஸ்சுடன் வந்த பாஜ மாவட்ட தலைவர் தரணி முருகேசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முத்துமுருகன், தரணி முருகேசனை தள்ளிவிட்டு  இருவரும் மோதி கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மோதலுக்கு முக்கியம் காரணம், கடைசி நேரத்தில் பணம் விநியோகம் செய்வதில் பாஜவினருக்கும், ஓ.பி.எஸ். அணியினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னைதான் இருவருக்கும் இடையே கை கலப்பில் பாஜ மாவட்ட தலைவர் தாக்கப்பட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர். பாஜ மாவட்ட தலைவர் தரணிமுருகேசன், அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவர். ராமநாதபுரத்தைப் பொறுத்தவரை இரு பிரிவினவருக்கும் இடையே ஏற்கனவே யார் பெரியவர்கள் என்ற பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் தரணிமுருகேசனிடம் கடைசி நேர பண விநியோகத்தை கொடுக்காமல் ஓ.பன்னீர்செல்வம் அணியினரே செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

கோவை 

தேர்தல் பிரச்சாரத்தில் ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு பாஜக வேட்பாளர் அண்ணாமலை பணம் கொடுத்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கோவையில் பாஜகவுக்காக தேர்தல் பணியாற்றப் போவதில்லை என கோவை கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் கோவை ராஜ் தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவித்தார் கூட்டணி கட்சிகள் எவரையும் பாஜக மதிக்காததால் அதாவது  (செலவுக்கு பணம் கொடுக்காததால்) தேர்தல் பணியில் இருந்து மிகுந்த மன வருத்தத்துடன் வெளியேறுகிறோம். வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு கூட பாமகவை முறையாக அழைக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

விருதுநகர் :

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி பூத் ஏஜெண்டுகளுக்கு பாஜக தலைமை ஒதுங்கியிருந்த 40 லட்சம் ரூபாயை கொடுக்காமல் பாஜக மாவட்ட நிர்வாகிகள்  ஏமாற்றி விட்டதாக, குற்றம் சாட்டி திருமங்கலம் நகர் முழுவதும்  சுவரொட்டிகள்! ஒட்டி உள்ளனர்

4 கோடி நாகேந்திரன் :

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் .4 கோடி பணத்தை எடுத்துச்சென்ற  சதீஷ், நவீன், பெருமாள்  இவர்களில் சதீசும், நவீனும் சகோதரர்கள் ஆவர். சதீஷ் பா.ஜனதா கட்சி நிர்வாகியாகவும்  இருவரும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாஜக எம்எல்ஏ  மற்றும் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் வேலை செய்து வருவதும், இதில்  பெருமாள் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்பதும் தெரிய வந்தது. இந்த 3 பாஜக பிரமுகர்களும்  போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நெல்லை தொகுதி தேர்தல் செலவுக்காக பணத்தை கொண்டு செல்வதாக கூறினார்கள். சட்ட விரோதமாக ரெயிலில் கடத்தப்பட்ட இந்த பணத்துக்கு கணக்கு ஏதும் இல்லாத நிலையில் 3 பேர் மீதும் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது மேலும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதியப்பட்டு தேர்தல் ஆணையம் விசாரணைக்கு சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பத்திரம் ஊழல் ?

பல லட்சம் கோடி தேர்தல் பத்திரம் ஊழல் பணத்தைதான்  நாடு முழுவதும் பாஜக தலைமை நிர்வாகிகளுக்கு அனுப்பி வருகிறது அந்த ஊழல் பணத்தை  பாஜகவினர்  தற்போது பங்கு பிரிப்பதில்  நிர்வாகிகளுக்கும் கூட்டணி கட்சியினருக்கும் மோதலை உருவாக்கி வருகிறது என குற்றம்சாட்டி வருகின்றனர் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் முன்னதாக வாக்காளர்கள் யாருக்கும் பணம் தர மாட்டோம்  என்று  பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலை மேடைக்கு மேடை பேசி வந்தார்.

ஆனால் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜ சார்பில் பணம் கொடுத்து பலர் சிக்கியது வெட்ட வெளிச்சமானது. அண்ணாமலையே ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது இது மட்டுமன்றி வெற்றி வாய்ப்பு உள்ள பல தொகுதிகளில் பாஜவினர் பண பட்டுவாடாவில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் நயினார் நாகேந்திரனின் உதவியாளரிடம் ரூ 4 கோடி  பணம் சிக்கியது முதல் பல வகையில் தேர்தல் விதிகளை மீறி பாஜக ஈடுபட்டனர்  என்பது குறிப்பிடத்தக்கது

– கேஎம்ஜி

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.