அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கவுன்சிலிங்கில் மாணவியை தவறாக வழிநடத்திய வழக்கு

0

திருச்சியில் அடகு நகையை விற்க

துரை மாவட்டம் பழங்காநத்தத்தைச் சோ்ந்த அருணகிர் ஐகோர்ட் கிளையில் 2017- 18ம் கல்வி ஆண்டில் நீட் தேர்ச்சி பெற்ற என் மகளுக்கு, கல்லூரி ஒதுக்கீடு தொடர்பாக கவுன்சலிங் விதிகளை மீறி முறையாற்ற விதத்தில் நடந்தது. இதில், பாதிக்கப்பட்ட என் மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 50 லட்சம் ரூபாயை இழப்பீடு வழங்க வேண்டும்  என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மனுதாரரின் மகள் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். நீட் தேர்வில் 136 மதிப்பெண்களை பெற்று கவுன்சலிங் கலந்து கொண்டுள்ளார். 46 இடங்களுக்கான பட்டியலில் 43 வது நபராக கலந்து கொண்டுள்ளார். அரசு கல்லுாரிகளில் 3 இடங்கள் இருந்த நிலையில், மருத்துவக் கல்வி இயக்குனர் அவற்றை ஓசி பிரிவை சேர்ந்த சுபிஷா, ஸ்ரீமதி, கவிதா ஆகிய மாணவிகளுக்கு ஒதுக்கியுள்ளார்.

மனுதாரரின் மகளுக்கு அரசு கல்லுாரி எனக் குறிப்பிட்டு சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியில் இடம் வழங்கப்பட்டு, அதற்கான கற்பித்தல் தொகையாக 9 ஆயிரத்து 600 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் மனுதாரர் கல்லூரியில் சேர்ந்த பின்பு அது சுயநிதி கல்லூரி எனக் குறிப்பிட்டு, 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை கல்வி கட்டணமாகவும் 75 ஆயிரம் ரூபாயை விடுதி கட்டணம் ஆகவும் செலுத்த அறிவுறுத்தியுள்ளனர். மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மனதாரரும் 3 லட்சத்து 50 ஆயிரத்து 370 ரூபாயை செலுத்தியுள்ளார்.

Admission Enquiry Form

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இருப்பினும் தொடர்ச்சியாக கட்டணம் செலுத்த இயலாது என்பதால், அரசு பல் மருத்துவக் கல்லுாரியில் தனக்கு இடம் ஒதுக்குமாறு மனுதாரர் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துள்ளார் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளரிடமும் இது தொடர்பான கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. 2ம் கட்ட கலந்தாய்வில, பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கான இடம், ஓசி பிரிவைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நல்ல மதிப்பெண்களுடன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு அரசு கல்லூரியில் இடம் வழங்கப்படாததுடன், செலுத்திய கட்டணத்தை திரும்ப வழங்கவேண்டும் எனில் கல்வியை இடைநிறுத்தம் செய்வதாக மனு வழங்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.

கலந்தாய்வில் மனுதாரருக்கு ஒதுக்கப்பட்ட ராஜா முத்தையா கல்லுாரி மற்றும் பல் மருத்துவக் கல்லுாரி அரசு கல்லூரிகளின்கீழ் வகைப்படுத்தப்பட்டது சட்டவிரோதமானது. மாணவர்களையும் அவரது பெற்றோரையும் தவறான முறையில் வழிநடத்திய இந்த செயல் சட்ட விரோதமானது. ஆனால் மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் இயக்குனர் இதுவரை முறையான பதில் மனுவை தாக்கல் செய்யவில்லை. இது மனுதாரரின் மகளின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது.

மாணவியை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் இயக்குனருக்கு 5 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.