“ரெட் ஜெயண்ட் இருக்க, பயமேன்”  – ‘வாழை’ வெற்றி விழாவில் மாரி செல்வராஜ் பேச்சு!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

Navvi Studios   சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ்  வெளியிட்ட, ‘வாழை’படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது . இப்படத்தின் வெற்றியை செப்டம்பர் 17-ஆம் தேதி இரவு படக்குழுவினர் கோலாகலமாகக் கொண்டாடினர்.

இந்நிகழ்வினில், படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

Sri Kumaran Mini HAll Trichy

விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த ரெட்ஜெயன்ட் மூவிஸ் செண்பக மூர்த்தி, அர்ஜூன் துரை, டிஸ்னி ஹாட் ஸ்டார் பிரதீப் ஆகியோருக்கு வெற்றிக்கேடயம் வழங்கப்பட்டது.

மகிழ்ச்சியைக் கொண்டாடி பேசியோர்….

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ரெட்ஜெயன்ட்  அர்ஜூன் துரை

“மாரி சார் ரெட்ஜெயன்ட் மூவிஸுக்கு எப்போதுமே ஸ்பெஷல். எங்களுக்கு மாமன்னன் எனும் மாபெரும் வெற்றியைத் தந்தார். இப்போது வாழை மூலம் மீண்டும் ஒரு வெற்றியைத் தந்துள்ளார். இந்தப்படத்திலும் இணைந்தது மனதுக்கு மிக மகிழ்ச்சியைத் தந்தது”.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரதீப்…

“ஹாட்ஸ்டாரின் முதல் திரையரங்குத் திரைப்படம் வாழை. இன்னும் சில படங்கள் ரெடி ஆகிக்கொண்டிருக்கிறது. ரெட்ஜெயன்ட் மூவிஸுக்கு நன்றி. இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் என் நன்றிகள். இன்னும் 10 வருடத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் எத்தனை படங்கள் செய்தாலும், வாழை தனித்து நிற்கும். இப்படம் மூலம் மாரி என்ற நண்பன் கிடைத்தது மகிழ்ச்சி. மாரி தனித்துவமான கலைஞன். அவருடன் மீண்டும் ஒரு புராஜக்ட் செய்ய பேசிக்கொண்டிருக்கிறோம்”.

கலை இயக்குநர் குமார் கங்கப்பன்

“இப்படத்திற்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்கு நன்றி. எனக்கு வாய்ப்பு தந்த மாரி செல்வராஜ் அவர்களுக்கு நன்றி. படத்தில் நடித்த நடிகை, நடிகையர் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகள். இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி”.

எடிட்டர் சூர்ய பிரதமன்

“படத்தின் ஃபர்ஸ்ட் டிராஃப்ட் படிக்கும்போது, நான் இந்தப்படத்தின் எடிட்டராக இருப்பேன் என்பதே தெரியாது.  இந்தப் படம் தந்த எமோஷனல் ஜர்னி வித்தியாசமானது”.

Flats in Trichy for Sale

நடிகர் கலையரசன்

“இப்படத்திற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி. வாழை என் வாழ்வில் மிக முக்கியமான படம். ஷூட்டிங்கின்  முதல் நாளிலிருந்து அனைவரும் இப்படத்திற்கு, நேர்மையாக போட்ட உழைப்பு தான் இந்த வெற்றிக்குக் காரணம்”.

திலீப் சுப்பராயன்

“ஆக்சன் மாஸ்டராக போய், தயாரிப்பாளராக மாறியது மிக நெகிழ்வான தருணம். மாரி சார் ரைட்டிங்க் எனக்கு ரொம்பப் பிடிக்கும், வாழை ஏன் மிக முக்கியம் என்றால், ஏற்கனவே ஒரு படம் செய்து தோற்றிருக்கிறோம், ஆனால் சினிமா தந்தது, என ஏற்றுக்கொண்டேன். ஆனால் அதுவே இப்போது எனக்கு வெற்றியைத் தந்துள்ளது. சினிமாவை நேசித்தால், அது திரும்பத் தரும். நவ்வி ஸ்டூடியோஸ், டிஸ்னி, ரெட்ஜெயன்ட் எல்லோருக்கும் நன்றி. பத்திரிகையாளர்கள் கொண்டாடினார்கள். அனைவருக்கும் என் நன்றிகள்”.

திவ்யா துரைசாமி

“மிக நிறைவான விழாவில் இருக்கிறேன், புளூஸ்டார் படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு நிறைவான விழா. என்னுடன் உழைத்த கலைஞர்கள் நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி”.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

” 2012 ல் ஃபிலிம்மேக்கராக வந்த ரஞ்சித், மாரி, நலன் என எல்லோரும் நல்ல படம் செய்து, மிகப்பெரும் வளர்ச்சியடைந்துள்ளார்கள். மகிழ்ச்சி. ஒரு நல்ல கதை, வசூலிலும் சாதிப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. வாழை என்னுடைய ஃபேவரைட் படங்களில் எப்போதும் இருக்கும், இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள் “.

 நிகில விமல்

“பூங்கொடி பாத்திரத்தைத் தந்த மாரி சாருக்கு நன்றி. மாரி சார் வாழக்கையை வாழ்வது கஷ்டம். ஆனால் அவர் வாழ்ந்த வாழ்க்கையைப் படமாகத் தந்துள்ளார்.அதில் நானும் ஒரு பார்ட்டாக இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. எனக்கு அழகிய லைலா போலப் புகழ் கிடைப்பதை விட, பூங்கொடியைக் கொண்டாடுவது தான் மகிழ்ச்சி”.

 

இயக்குநர் மாரி செல்வராஜ்

“என் சக தமிழ் திரைத்துறை தோழர்களுக்கு நன்றி. என் திரையுலகம் இந்த வாழை படத்தைக் கொண்டாடிய விதம், எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. திரைத்துறை இயக்குநர்கள், நண்பர்கள் தான் முதலில் இப்படத்தை எல்லோரிடமும் கொண்டு சேர்த்தார்கள்.  நான் வேலை பார்த்த அனைத்து தயாரிப்பாளர்களும் கொடுத்த சுதந்திரம் தான் இந்த வெற்றிக்குக் காரணம், ரஞ்சித் சார், தாணு சார், ரெட்ஜெயன்ட், டிஸ்னி என நால்வருக்கும் என் நன்றிகள். இந்த படத்தை நானே வெளியிடக் காரணம், ரெட்ஜெயன்ட் இருக்கிறது எனும் தைரியம் தான். செண்பக மூர்த்தி சார் படம் பார்த்து, உங்களுக்கு மிகப்பெரிய பெயர் கிடைக்கும் என வாழ்த்தினார். நன்றி. என் டீம் மிகப்பெரிய உழைப்பைத் தந்தனர். அதை விட என் நடிகர்கள் மிகப்பெரிய உழைப்பைத் தந்தனர். அவர்கள் தான் இந்த வெற்றிக்குக் காரணம். என்னைப்பற்றிய  கேள்விகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கான பதில் தான் வாழை படம். இன்னும் பல படங்கள் எடுத்துக்கொண்டே இருப்பேன், நான் வாழ்நாள் முழுதும் என் கதைகளைச் சொல்லிக்கொண்டே இருப்பேன். நான் ஓய்வு பெறும் போது, அடுத்துக் கதை சொல்ல ஆட்களைத் தயார் செய்திருப்பேன். அவர்கள் சொல்ல ஆரம்பிப்பார்கள். இன்னும் இன்னும் பல கதைகள் வரும். என் வாழ்க்கையைக் கலையாக மாற்றியிருக்கிறேன். இந்த கலைக்கு என்றும் உண்மையாக இருப்பேன்”.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.