பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்எல்ஏ கழிஜ் பேச்சும் – திமுகவினர் பதிலடியும்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில்  அ.தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா 116-வது  பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கடந்த 23 ந் தேதி பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. கூட்டத்துக்கு, முன்னாள் அமைச்சரும், தர்மபுரி  மாவட்ட கழகச் செயலாளருமான கே.பி அன்பழகன்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் கூட்டத்தை ஏற்பாடு செய்த பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி பேசின பேச்சு மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று உள்ளது .

வாடா , போடா, அவன், இவன், ஒரு அப்பனுக்கு பிறந்து இருந்தால், உடம்பில் நல்ல ரத்தம் ஓடுமேயானால் , என  முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல் மாவட்ட செயலாளர் பழனியப்பன் வரை,  சகட்டுமேனிக்கும் திட்டி தீர்த்தார் எம்எல்ஏ  கோவிந்தசாமி

அங்குசம் இதழ்..

அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி
அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி

 

அந்த கூட்டத்தில் பேசிய அவர் பாஷையில் இங்கு அப்படியே  ,

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இங்கேயும் ஒரு அப்பன் ( பி பழனியப்பன்) இருந்தான் அவன் ஓடிப் போனான் ஓடுகாளி  , கருணாநிதி குடும்பம் கடனில் மூழ்கி போச்சு அதனால் ஊரைவிட்டு ஒட வேண்டிய சூழ்நிலை அப்போது கருணாநிதி மருமகன் மாறன் வந்து எம்ஜிஆர் கிட்ட கெஞ்சுறான்,  கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீடு சேட்டுக்கிடட்ட அடமானம் வச்சுட்டாங்க அந்த வீட்டை காலி செய்ய வேண்டும்னு கருணாநிதியை சேட்டு தொந்தரவு பன்றான் .

அப்ப எம்ஜிஆர் சொல்றார் கவலைப்படாதே அத நான் பார்த்துக்கொள்கிறேன் சொல்லிட்டு, வீட்டுக்கு மாறனை அனுப்புகிறார் உடனே கலைச்செல்வியாக இருந்த நமது புரட்சி தலைவி அம்மாலை கூப்புடுகிறார் புரட்சி தலைவர் எம்ஜிஆர் , அந்த கருணாநிதி கடனில் இருக்கிறானாம் , நாம் எதாவது பன்னனும் என்று  யோசித்து எங்கள் தங்கம் என்ற படத்தில் புரட்சி தலைவரும்‌ தலைவியும் நடித்து கருணாநிதி வீட்டின் கடத்தை அடைத்தனர்  , அவர்களுக்கே துரோகம் பன்னிட்டு  கருணாநிதி போய்ட்டான்.

முன்ன ஒருத்தனை  ஓடுகாளி அப்பன்னு  சொன்னேனே  (முன்னாள் அமைச்சர் பி பழனியப்பனை )  மோளையனுரில் கடன் பட்டுட்டு தருமபுரிக்கு ஓடி வந்துட்டான் , தர்மபுரி அவுசிங்போர்டு இங்கு வந்து இருக்காரானு யாரோ ஒருவர் பெயரை குறிப்பிட்டு அவர் வீட்டுக்கு வரி கட்டாம அங்க‌ வந்து குடி இருந்தான்  அப்போ இந்த தொகுதியில் பாப்பிரெட்டிப்பட்டி க்கு பொறுப்பாளராக இருந்தான் அப்போது அம்மா காலில் விழுந்து எப்படியாவது எங்கள் குடும்பத்தை காப்பாத்துங்க இல்லை என்றால் குடும்பத்தோடு  சாவோம்னு சொல்லி சீட் கேட்டான் , இந்த தொகுதியில் இருந்து ஓடி வந்தவன அம்மா அமைச்சர் ஆக்கி அழகு பார்த்தார் , இப்ப எங்க போயி இருக்கான் கருணாநிதி  துரோகம் செஞ்சானோ அங்க போயி இருக்கான் துரோகி துரோகிடம்தானே போய் சேர முடியும்.

தேர்தல் பிரச்சாரத்தில் இந்த தொகுதி உள்ள ஒரு அம்மாவிடம் போய் எம்ஜிஆரை தப்பா சொன்னதால் பழனியப்பனை செருப்பால் அடிச்சுடுச்சு அந்த அம்மா அதுக்கு பாராட்டு விழா விரைவில் எடுக்க போறேன் அன்றவர் , இது பாப்பிரெட்டிப்பட்டி  முழுவதும் தெரியும் நீ இருக்கிற வீடு அதிமுக போட்ட பிச்சை , உன் உடம்புல நல்ல ரத்தம் ஓடுதுனா அதிமுகவில் சம்பாதித்த சொத்த,  நீ அதிமுகவுக்கு எழுதி கொடுத்துட்டு போய்விடு

எம்ஜிஆர் மற்றும் அம்மாவை தப்பா பேசினால் நீங்கள் சும்மா விடுவிங்களா அதிமுக சம்பாதித்த பணத்தில் வூடு கட்டினு வக்காந்து இருக்கான் பேரறிஞர் அண்ணா ஆரம்பித்து கட்சிக்கு  கருணாநிதியை கணக்கு கேட்டார் எம்ஜிஆர்,  கணக்கு கேட்டதாலே எம்ஜிஆரை தூக்கி அடிச்சான் கருணாநிதி, அதுபோல  இந்த தொகுதியில் துரோகம் பன்னிட்டு போன இந்த துரோகியை ( பழனியப்பனை) எந்த காலத்திலும் நீங்கள் மன்னிக்க கூடாது , கூடவே கூடாது இது என்னுடைய கோரிக்கை.

மந்திரியாக இருந்த (பழனியப்பன்)   தொகுதிக்கு என்ன நல்லது செஞ்சான்  ஒரு அணியும் புடுங்கல , அம்மா கிட்ட தவறான தகவலை கொடுத்து உதாரணமாக பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூரியை கொண்டு வந்தான் அம்மா ஆட்சி காலத்துல , ஆனா அந்த பசங்களுக்கு எவ்வளவு பீஸ் கட்டனும்னு  தெரியல , எனா மக்களுக்கு நன்மை செய்யனும்னு தெரியாது நடிக்க மட்டும் தான் அந்த ஆளுக்கு தெரிந்தது அதனால் என்ன பன்னான் உருப்பு கல்லூரிய போட்டு ஒவ்வொரு மாணவர்களுக்கு ஏழாயிரம் எட்டாயிரம் கட்டணத்தை பழனியப்பன் போட்டுட்டான்,  இப்படி ஏகத்துக்கும் அவன் இவன் என்று கொச்சையாக  பொய்யும் புரட்டும் ஏக வசனத்தில் பேசுகிறார் கோவிந்தசாமி இந்த வீடியோ ஆதாரத்தை தான் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஆதாரமாக வைத்து புகார் அளித்துள்ளனர்  திமுக  நிர்வாகிகள்.

திமுக நகர செயலாளர் ஜெயச்சந்திரன்
திமுக நகர செயலாளர் ஜெயச்சந்திரன்

புகார் அளித்த  பாப்பிரெட்டிப்பட்டி திமுக நகர செயலாளர் ஜெயச்சந்திரனிடம் பேசினோம். அவர் அண்ணாவை தவிர மற்ற அனைவரையும் ஒருமையில் பேசிட்டார் , நாகரிகமாக அரசியல் செய்வதாலே பொறுத்துக்கொண்டோம் அடுத்த முறை பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் வரம்பு மீறி  எங்கு பேசினாலாம்  விட மாட்டோம் என சீறியவர் கோவிந்தசாமியே சாதாரண ஒரு வெல்லம் வியாபாரி தான் ,  அதிமுகவில் பழனியப்பன் மந்திரியாக இருந்த போது , பஞ்சாயத்து துனை  தலைவராகவும் , பின்னர் வார்டு மெம்பராக இருந்த  வெல்ல வியாபாரி கோவிந்தசாமியை பழனியப்பன் தான் , பேரூராட்சி தலைவர் ஆக்கினார்.

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி மக்கள் பழனியப்பனின் எடுப்புடி கோவிந்தசாமி என  நன்கு அறிவார்கள் அதனால் திமுகவினரை விமர்சனம் செய்ய அந்த ஆளு அருகதையற்றவர்   என்றவர் , கடந்த 23 ந்தேதி நடைப்பெற்ற அண்ணா  பிறந்தநாள் கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி மற்றும் திமுக மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆகியோரை பற்றி தரக்குறைவாக பேசியதால்  கோவிந்தசாமி மீது பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் எனது தலைமையில் புகார் அளித்தோம் .

இதே போல் 2021 டிசம்பர் மாதம் நடைப்பெற்ற அதிமுக ஆர்பாட்டத்தில் மாண்புமிகு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை அவதூறாகப் பேசியதற்காக   தருமபுரி கிராம நிர்வாக அலுவலா் சாக்கப்பன், தர்மபுரி நகரக் காவல் நிலையத்தில்  அளித்த புகாரில்  ஐபிசி 143, 269, 294 (பி), 505 (1) (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் தொடர்ந்து அனைவரையும் ஒருமையிலும் பொய்யான தகவல்களையும் பேசி வருகிறார் இனி இதுபோன்று பேசினால் இனி பொருக்க‌ மாட்டோம்  என்றார் சீரியஸாக புகார் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்எல்ஏ  கோவிந்தசாமி சொல்லும் காரணங்கள்

நீங்கள் ஒரு எம்எல்ஏ, அனைவரையும் அவன் இவன் என ஒருமையில் பேசலாமாங்க என்ற கேள்விக்கு ?

அப்பப்போ ஒரு ப்ஃளோவில் வரும்.  நாங்கள் கிராமப்புறத்துக்காறங்க‌ பேச்சு வழக்கில் இப்படிதான் பேசுவோம்ங்க டிவி விவாதத்தில் கூட கலை என்பவர் அப்படித்தான் பேசுகிறார் என்று ஞாயம் கற்பித்தார் . 1970 -ல் அடமானத்தில் இருந்த கலைஞர்  வீட்டை  எம்ஜிஆர் எங்கள் தங்கம் நடித்து அந்த பணத்தில் மீட்டார் என்று கூறுகிறீர்கள் 1969 ,1971  காலத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தாரே என கேட்டதற்கு?

எங்கள் புரட்சி தலைவி அம்மா அப்போ கலைச்செல்வியாக இருந்தார் இந்த தகவல் முரசொலியிலே இருக்கு நீங்க தேடி போய் பாருங்கள் என்றார் முரசொலியா?  நமது எம்ஜிஆரா ? தெரியவில்லை அவரே கண் பியூஸ் ஆகிட்டார்

திமுகவில் சேரப்போவதாகவும் , சிலபல காண்ட்ராக்ட் வேண்டியும் தர்மபுரி பொறுப்பு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வத்தை ரகசியமா சந்தித்ததாகவும் தகவல் வந்ததே என்ற கேள்விக்கு?

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

முற்றிலும் அது பொய்யான தகவல்கள் அப்படி நான் சந்திக்கவே இல்லை எனக்கு ஒரு அப்பன் தான் , அதுபோல அதிமுகதான் என் தாய் வீடு என்றவர் ரகசியம் சந்தித்ததாக தகவல் வந்ததே என கேட்டதற்கு

ரகசியமாக சந்திக்கவில்லை சந்திப்பின் போது பலர் இருந்தார்கள் அது எப்படி ரகசியமாகும், எனவே சந்தித்தது உண்மைதான் பாப்பிரெட்டிப்பட்டி சுகர் மில் கெஸ்ட் ஹவுஸில் சந்தித்தேன் எதற்கு என்றால் பாலக்கோடு தொகுதியில் உள்ள.. வேளாண்மை கலைக்கல்லூரியை திறக்க வேண்டும் என கோரிக்கை வைப்பதற்காக சந்தித்தேன் என்றார் , அந்த சந்திப்பின் போது அப்போதைய கலெக்டர் திவ்யதர்ஷினி இருந்தார் அவரை வைத்துக்கொண்டு கமிஷன் கேட்பார்களா  எவனா என்றவரிடம் ? பாலக்கோடு கேபி அன்பழகன் தொகுதி ஆச்சே என்ற கேள்விக்கு அழைப்பை துண்டித்தவர்,

சில நிமிடங்களில் மீண்டும் நம்மை அழைத்தவர்

பட்டிக்காட்டான் நான் , அவன் இவன் என்று பேசுவதில் தவறு இல்லையே என்றவர் ஆத்தா,  அம்மா,  என்று பேசினால் தான் தப்பு , நான் அப்படி பேசவில்லையே என ஒரு போடு போட்டார்.

கடத்தூர் பஸ் நிலையம் புனரமைப்பு செய்து திறந்த போது உங்கள் படத்தை மட்டுமே  இடம்பெற்றது எம்ஜிஆர் , ஜெயலலிதா, கேபி  அன்பழகன் படம் இல்லை ஏன் என்ற  கேள்விக்கு ?

என்னுடைய நிதியில்தான் ( ரூ 50 லட்சத்தில்) புதுப்பிக்கப்பட்டது அந்த விளம்பரத்தில் அம்மா படத்தையும் புரட்சி தலைவர் படத்தையோ எங்கள் வழிகாட்டி அன்பழகன் படங்களோடு பேனர் வைத்தேன் ஆனால்  கடத்தூர் பேரூராட்சி அதிகரி தற்போதைய முதல்வர் படத்தையும் சேர்த்து வையுங்கள் இல்லை என்றால் நிதி பெற முடியாது என்றார் , அதனால் வைக்க முடியாதுல்ல ,  அதனாலே என் படம்‌ மட்டும் இடம்பெற்ற பெயர் பலகையை வைததேன் என்பதோடு  தனது உரையாடலை முடித்துக் கொண்டார்

*எம்எல்ஏவின் தொடர் சர்ச்சை குறித்து கடத்தூர் திமுக  இணையதள பிரமுகர் கேசிஆர்  தங்கராஜ் பேசுகையில்….

நான் கூட அந்த எம்எல்ஏ விற்கு வீடியோ வடிவில் பதிலடி கொடுத்து உள்ளேன் அந்த ஆள் பாஷையில் சொல்ல வேண்டுமானால் அந்த எம்எல்ஏ மிகப்பெரிய பொய்யன்  என்பதற்கு உதாரணம் அக்டோபர் 9 / 1970 ஆண்டு எம்ஜிஆர் நடித்த எங்கள் தங்கம் வெளிவந்தது ,  அப்போது கலைஞர் கருணாநிதி 1969,1971,1989, காலக்கட்டங்களில் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறார்,  முதல்வராக இருப்பவர் வீடு அடமானத்திலா இருக்கும் , பொய் பேசினாலும் பொருந்தும்படி பேச வேண்டுமா , அதேபோல் எங்கள் மாவட்ட செயலாளர் பி .பழனியப்பன் அவர்கள் ஆசிரியர் பணி செய்தவர் அவருக்கு பூர்வீக சொத்து ஏராளம். அதிமுகவில் இருந்த போதும் சரி , தற்போது வரை மோளையனூரில் உள்ள பூர்விக வீட்டில் தான் உள்ளார்.

முன்னாள் அமைச்சர் பழனியப்பன்
முன்னாள் அமைச்சர் பழனியப்பன்

 

வீடு இல்லாமல் தர்மபுரி  அதிமுக நிர்வாகி வீட்டில் வாடகை கொடுக்காமல் இருந்தார் என்று பச்சை பொய் சொல்கிறார்,  அந்த  அரசியல் அமாவாசை கோவிந்தசாமி , அவரை வளர்த்து விட்டதே எங்கள் மாவட்ட செயலாளர் பழனியப்பன்தான் , கோவிந்தசாமி பேசுவது அத்தனையும் பச்சை பொய்,  இந்த தொகுதி பாமர  மக்களிடம்  மூடநம்பிக்கை ஏற்படுத்தி பொய்களையும் , கட்டுக்கதைகளையும் பேசி  திமுகவை வளரவிடாமல் தடுகிறார் எங்கே 2026-ல் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி தன் கைவிட்டு பழனியப்பன் கைக்குள் பேய் விடுமோ என்று பயத்தில் பிதற்றுகிறார் அவர்  வாயை திறந்தாலே ஒரே கழிஜ் பேச்சுதான் என காட்டமாக பேசினார்

கோவிந்தசாமியும் சர்ச்சைகளும்

கடந்த செப்டம்பர் 9-ந் தேதி  தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கடத்தூர் வட்டார கல்வி அலுவலகத்தை யார் திறப்பது என அதிமுக – திமுக  நிர்வாகிகளுக்கிடையே வாக்குவாதம், ஏற்பட்டது . போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் , திமுகவினர் அனைவரும் அங்கிருந்து கிளம்பியதும்  அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி கடத்தூர் வட்டார கல்வி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கடந்த ஆகஸ்ட்  11 ந் தேதி  தருமபுரி  மாவட்டம் கடத்தூர் அருகே அதிமுக நிர்வாகி ரத்தினவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் , கல்குவாரியை மூடக்கோரி எம்.எல்.ஏவிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நரசிம்ம பெருமாள் மலையில் 2012-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் தனியார் கல்குவாரியால், மடதஹல்லி ஊராட்சியில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக வந்த பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்.எல்.ஏ கோவிந்தசாமியின் காரை மறித்து ஏராளமான பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நான் அதிமுகவில் இருந்து வேறு கட்சிக்கு தாவுவதாக உலா வரும் தகவலில் உண்மை இல்லை. நான் எந்த அதிமுகவின் உண்மை விசுவாசி, என் உடம்பில் எனது தந்தையின் ரத்தம் மட்டுமே ஓடுகிறது. என் தந்தை அதிமுக தான்” எனக் கூறியுள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் நபர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடரவுள்ளதாகவும் கோவிந்தசாமி எச்சரிக்கை விடுத்திருந்தார் .

கடந்த 2021 ஆண்டு 16-ம் தேதி தருமபுரி மாவட்டத்திற்கு வந்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை தனியார் கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தி காண்ரெக்ட் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும் தகவல் வெளியானது.

முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் வீட்டில் ரெய்டு நடந்த போது . இலக்கியம்பட்டியில் எம்.எல்.ஏ. கோவிந்தசாமியின் வீட்டிலும் ரெய்டு நடைபெற்றது  கோவிந்தசாமி முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனின் நெருங்கிய ஆதவாளர் என அப்போது தகவல் வெளியானது .

தொடர்ந்து திமுகவினர் மீதும் அதன் தலைவர்கள் மீதும் அவதூறு பேசும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமியை அவரது கட்சி தலைமை கண்டிக்க வேண்டும்,  இல்லை என்றால் நாங்கள் செய்ய வேண்டியதை செய்ய நேரிடும் என கொந்தளித்து வருகின்றனர் தர்மபுரி திமுகவினர் .

 

– மணிகண்டன்

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.