அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மதுரையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் !

0

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வெங்கல சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Jayanti festivalபின்னர் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு கீழ் உள்ள முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படத்திற்கு முதல்வர் பூக்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

இந்நிகழ்வில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், பெரியசாமி, தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், அன்பில் மகேஷ், டி.ஆர்.பி.ராஜா, கீதா ஜீவன், கே.கே.எஸ்.எஸ்.ஆர், பெரியகருப்பன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மேயர்  உள்ளிட்டோர்கள் பங்கேற்றனர்.

HARINI JEWELLERS TRICHY

ஜெயந்தி விழாபின்னர் இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக காரில் புறப்பட்டு சென்றார். இதன் பின்னர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சசிகலா, சீமான், ஜி.கே.மணி, ஒ.பி.எஸ், துரை வைகோ, திருநாவுக்கரசர் ஆகியோரும்  தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

ஜெயந்தி விழாமுத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாக்களை அடுத்து மதுரை மாவட்டத்தில் 5,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியினை மேற் கொண்டு வருகிறார்கள்.

 

— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.