அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் பிரஸ் மீட் நியூஸ்!

0

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

2019 ஆம் ஆண்டு வெளியான  பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘தி லயன் கிங்’ வெற்றியைத் தொடர்ந்து ’முஃபாசா: தி லயன் கிங்’ இந்த டிசம்பர் 20, 2024-ல்  வெளியாகிறது. தமிழில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு நடிகர் அர்ஜுன் தாஸ், டாக்காவுக்கு அசோக் செல்வன்,  பும்பாவுக்குரோபோ சங்கர்,  டிமோனுக்கு சிங்கம் புலி, ரஃபிக்கியின் இளைய வெர்ஷனுக்கு  நடிகர் விடிவி கணேஷ், கிரோஸிக்கு  நடிகர்  நாசர் ஆகியோர் குரல் கொடுத்திருக்கின்றனர். இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு டிசம்பர் 16-ஆம் தேதி மதியம் சென்னை பளாசோ (Palazzo) தியேட்டரில் நடந்தது.

அதில் பேசியோர்….

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

நடிகர் நாசர், “நடிகனாகவும் டப்பிங் கலைஞராகவும் பல படங்கள் பணிபுரிந்து விட்டேன். சிவாஜி சார், அமிதாப் பச்சன் சார், ராஜா அண்ணன் இவர்கள் குரல் எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதில் சிவாஜி சார் குரல் எனக்கு ஆதர்சம்.

தி லயன் கிங் திரைப்படம்
தி லயன் கிங் திரைப்படம்

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

உங்களுக்கு எத்தனை வயதானாலும் உங்களுக்குள் ஒரு குழந்தை எப்போதும் இருக்கும். அதனால், இது குழந்தைகளுக்கான படம் மட்டும் கிடையாது. அனைவரும் இதை பார்க்கலாம். தொன்மையான புராணக்கதைகள், வரலாற்றுக்கதைகள் எல்லாம் நம்மிடம் உள்ளது. அதையும் நல்ல தரத்தில் இன்னும் மெருகூட்டி படமாக்க வேண்டும்”.

HARINI JEWELLERS TRICHY

நடிகர் சிங்கம்புலி, ’தி லயன் கிங்’ படத்தில் டப்பிங் வாய்ப்பு எனக்குக் கிடைத்த கிஃப்ட். இந்தப் படத்தில் ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இதில் எனக்கு டீமோன் கதாபாத்திரம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி”.

நடிகர் அர்ஜூன்தாஸ்,  “இந்தப் படத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் நிறைய எமோஷன் இருக்கும். அதனால், மற்ற படங்களுக்கு டப் செய்வது போல அல்லாமல், கவனமாக செய்தேன். உங்களுக்குப் பிடிக்கும் என நினைக்கிறேன். நானும் முஃபாசாவின் மிகப்பெரிய ரசிகன். இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கான வட்டம் முழுமையாகி விட்டதாக நினைக்கிறேன்” என்றார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நடிகர் அசோக்செல்வன், “விலங்குகளுக்கு நான் டப்பிங் பேசுவது இதுதான் முதல்முறை. இந்த அனுபவம் புதியதாக இருந்தது. நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்” .

நடிகர் ரோபோ ஷங்கர், “இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி! உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் எனவும் நம்புகிறேன்”. நடிகர் விடிவி கணேஷ், “ரஃபிக்கின் இளைய வெர்ஷனுக்கு நான் குரல் கொடுத்திருக்கிறேன். படம் பார்த்து,  கேட்டுவிட்டு சொல்லுங்கள்!”.

 

—  மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.