அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி – மழைநீர் தேங்கியுள்ள இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் கே.என்.நேரு

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக பொன்நகர், கருமண்டபம் குளத்துக்கரை, பிராட்டியூர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு  உடனடியாக மழை நீரை வெளியேற்றிட மாநகராட்சி  அலுவலர்களுக்கு உத்தரவிட்டார் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள்.

திருச்சிராப்பள்ளியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளை  நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தேசியகல்லூரிஅருகில்,  தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளையும், கருமண்டபம் குளத்துக்கரை, பிராட்டியூர், காவிரிநகர், கொல்லாங்குளம் ஏரி ஆகிய பகுதிகளை பார்வையிட்டார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழைநீரை ராட்சத மோட்டார் பம்புகளை வைத்து, மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அதனை பார்வையிட்ட அமைச்சர், அப்பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

யாவரும் கேளீர்

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு.வே.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள், நகரப் பொறியாளர் திரு.சிவபாதம், மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.