அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அவரை முதலில் தூக்கத்திலிருந்து எழுந்திருக்க சொல்லுங்கள் … எடப்பாடியை கலாய்த்த டி.ஆர்.பி. ராஜா !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திமுக மாநில தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளரும், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சருமான டிஆர்பி ராஜா டிச-17 அன்று மதுரை விரகனூர் பகுதியில் நடைபெறும் மண்டல அளவிலான திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆய்வு கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “தமிழக முதல்வர் உத்தரவின்படி தமிழக முழுவதும் ஐடி விங்கின் மண்டலம் முழுவதும் ஆய்வு கூட்டங்கள் நடைபெறுகிறது. ஐடிபி விங்கின் செயல்பாடுகள் குறித்தும் அடுத்த கட்ட நகர்வு குறித்தும் கலந்து ஆலோசிக்க உள்ளோம்” என்றார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

டி.ஆர்.பி. ராஜா
டி.ஆர்.பி. ராஜா

தொடர்ந்து ஐ.டி.விங்கில் அவதூறு பரப்பும் நடவடிக்கையும் இருந்து வருகிறது என செய்தியாளர் கேள்விக்கு…  “யார சொல்றீங்க எதிரணியே சொல்றீங்களா.? எதிரணியை சொல்வதாக இருந்தால் ஏற்றுக்கொள்கிறேன். கழகத்தின் கொள்கைகள், முதல்வரின் செயல்பாடுகள் துணை முதல்வரின் செயல்பாடுகளை வெளி கொண்டு வருவதற்கே எங்களுக்கு நேரம் போதவில்லை.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் - MMM TRICHY -

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

கழகத்தில் புதிதாக வரும் இளைஞர்களிடம் கழகத்தின் கொள்கையை கொண்டு சேர்ப்பதில் பணிகள் இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இரவு பகலும் இதை செய்வதற்கே எங்களுக்கு நேரம் போதவில்லை, இதில் யார் யாரோ செய்வதற்கு திமுக ஐடி விங்கை பற்றி பேசுவது சரியல்ல.” என்றார். 100% கூறுகிறேன் எதிரணி குச்சி எடுத்தால் குச்சி வரும் தாத்தா சொன்னது போல.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டைட்டில் பார்க் வெகு விமர்சியாக பணிகள் நடைபெற்று வருகிறது. வெகு விரைவில் பிரம்மாண்ட டைட்டில் பார்க் மதுரையில் அமைய உள்ளது, தனித்துவமிக்க ஒரு கட்டிடமாக அது அமையும்.

2026 இல் பிரம்மாண்ட கூட்டணி பெரும் வெற்றி பெறும் என எடப்பாடி கூறியது குறித்த செய்தியாளர் கேள்விக்கு… முதலில் அவரை தூக்கத்திலிருந்து எழுந்திருக்க சொல்லுங்கள் என்று விமர்சித்து பேசினார்.

 

— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.