பாறைகள் நிறைந்த மதுரையில் மெட்ரோ ரயில் ! முதற்கட்ட ஆய்வை தொடங்கிய அதிகாரிகள் !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

துரை மெட்ரோ ரயில் அமைக்க ரூ 11,368.35 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளதை தொடர்ந்து பூர்வாங்க பணிகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன் தலைமையில் மதுரை ரயில்வே தண்டவாளம் அடியே மெட்ரோ சுரங்கம் அமைப்பதற்கான  சாத்திய கூறுகள் குறித்து ராமேஸ்வரம் ரயில் லைன் மற்றும் விருதுநகர் ரயில் லைன் ஆண்டாள்புரம் பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, “மதுரை மெட்ரோ ரயில்  ஒத்தக்கடை விவசாய கல்லூரியில் தொடங்கி புதூர் வழியாக தமிழ்நாடு ஹோட்டல் அருகே சுரங்க பாதை தொடங்குகிறது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

மதுரையில் மெட்ரோ ரயில்
மதுரையில் மெட்ரோ ரயில்

தொடர்ந்து வைகை ஆறு, மீனாட்சி அம்மன் கோவில் கடந்து ஆண்டாள்புரத்தில் முடிவடைந்து, பின்னர் அங்கிருந்து மேலெழும்பி திருப்பரங்குன்றம் வழியாக திருமங்கலம் வரையில் 32 கி மீ க்கு திட்டம் வரையறுக்கபட்டுள்ளது. ஆண்டாள்புரத்திலிருந்து திருப்பரங்குன்றம் வழியாக இந்தப் பாதையில் செல்கிறது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

இதில் தொழில்நுட்ப ஆய்வுக்காக தற்போது வந்திருக்கிறேன். இந்த மெட்ரோ பனியானது, 11,340 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசிடமிருந்து விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சென்று இருக்கிறது. இதனை பரிசீலனையில் வைத்துள்ளனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஆய்வை தொடங்கிய அதிகாரிகள்
ஆய்வை தொடங்கிய அதிகாரிகள்

தற்போது நடத்தப்படும் ஆய்வு மெட்ரோ அமைப்பதற்கான காலதாமதம் இல்லாமல் இருக்க எதுவாக இருக்கும். கோயம்புத்தூருக்கும் சேர்த்து மொத்தமாக தான் திட்ட அறிக்கைகள் மத்திய அரசிடம் அனுப்பப்பட்டுள்ளது. மெட்ரோ சுரங்கப்பாதை மதுரையில்  6 கிலோமீட்டர் அமைக்க சிறிது கடினமாக இருக்கலாம், ஏனென்றால் பாறைகள் மிகுந்து காணப்படுகிறது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மெட்ரோ பணிக்கு நிலம் கையகப்படுத்த எந்தவித தோய்வும் ஏற்படாது. மொத்தமாக 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அவற்றின் எண்ணிக்கை மாறுபடலாம்” எனவும் தெரிவித்தார்.

 

—  ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.