அங்குசம் சேனலில் இணைய

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பில் கிராமத்து மக்களுடன் இணைந்து கொண்டாடிய தோழமை பொங்கல் விழா !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி விரிவாக்கத்துறை மற்றும் தமிழாய்வுத்துறை இணைந்து தோழமை பொங்கல் விழாவை புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பச்சக்குடி ஊராட்சியில் அம்மன் கோவில் வளாகத்தில் கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் சே ச வழிகாட்டுதலின் படி நடைபெற்றது.

தமிழாய்வுத் துறை சார்பாக மகளிருக்கான கோலப்போட்டி குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் குறிப்பாக திருக்குறள் போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

தோழமை பொங்கல் விழா இந்நிகழ்ச்சிக்கு செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழாய்வுத்துறை தலைவர் முனைவர் பெஸ்கி அவர்கள் தலைமை தாங்கினார். விரிவாக்கத்துறை செப்பர்டு இயக்குநர் அருள் முனைவர் சகாயராஜ் சேச சிறப்பு விருந்திராக கலந்து  கொண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் சுதா, ஆசிரியர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயின்ட் ஜோசப் கல்லூரியின் இணையதள நிர்வாகி ரோசாரியோ வணிகவியல் துறை பணிமுறை பேராசிரியர் அகஸ்டின் ஆரோக்கியராஜ் ஆகியோர் வாழ்த்துரை   வழங்கினார்கள்.

தோழமை பொங்கல் விழா போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கள் பரிசுகள் மற்றும் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டன. விழாவின் முடிவில் சக்கரை பொங்கல் வெண்பொங்கல் மற்றும் கரும்புகள் ஆகியவை அனைவருக்கும் வழங்கப்பட்டன.

தோழமை பொங்கல் விழா இரண்டாம் ஆண்டு தமிழாய்வுத்துறை மாணவர் செல்வி ஆயிஷா சித்திகா வந்தவர்களை வரவேற்றார் முடிவில் செல்வி ஆனி ரெக்ஸிட்டா நன்றி கூறினார் செல்வன் ஆஷிக் டோனி நிகழ்ச்சி நெறியாளுகை செய்திருந்தார். இவ்விழாவில் ஊர் முக்கியஸ்தரர்கள் குழந்தைகள் மற்றும் கிராம பொது மக்கள் என அனைவரும் கலந்து கொண்டார்கள். இவ்விழாவை இரண்டாம் ஆண்டு தமிழாய்வுத்துறை மாணாக்கர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

 —   அங்குசம் செய்திகள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.