சாத்தான்குளம்- கல்குவாரிக்கு எதிர்ப்பு ! கலெக்டாிடம் ரேசன் கார்டுகளை ஒப்படைத்த பொதுமக்கள் !
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், நெடுங்குளம் கிராமத்தில் புதிய தொடங்கப்பட்ட கல்குவாரியை தடை செய்யக்கோரி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடும்ப அட்டைகளை ஒப்படைத்து கோரிக்கை.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், நெடுங்குளம் கிராமம் வேலன் புதுக்குளம் எனும் ஊரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம்.
எங்கள் ஊரில் 230/1, 230/2, 230/3, 230/4, 230/5, 230/6 மற்றும் 230/7ஆகிய சா்வே எண்களில் கிருஷ்ணா ப்ளு மெட்டல் என்ற கல்குவாரி நிறுவனம் புதிய கல்குவாரி ஒன்றை ஆரம்பித்துள்ளது. முழுவதும் விவசாயத்தை நம்பியிருக்கும் எங்கள் கிராமத்தில் விவசாய மற்றும் மேச்சல் நிலங்களுக்கு நடுவில் கல்குவாரி அமைந்துள்ளதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்குவாரியில் பயன்படுத்தப்படும் வெடி மற்றும் வெடிபொருட்களால் பழைய வீடுகள், விவசாய கிணறுகள் ஆகியவை இடிந்துவிழும் வாய்ப்புள்ளது. நிலத்தடி நீா்மட்டம் குறைவதால், ஏற்கனவே வறட்சி பகுதியாக இருக்கும் எங்கள் விவசாய நிலம் மேலும் வறண்டு போகிறது. காற்று மாசபாடு மற்றும் தூசிகளினாலும் சிறு குழந்தைகள் மற்றும் முதியோருக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், இது சம்பந்தமாக டிசம்பா் மாதம் 09.01.2025 அன்று நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் குறைதீா் கூட்டத்தில் கிராம மக்கள் இணைந்து மனு கொடுத்தோம். மேலும் 11.12.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவா், வட்டாட்சியா், கனிமவளத்துறை இயக்குநர், வருவாய்க் கோட்டாட்சியா், கிராம நிர்வாக அதிகாரி, மாவட்ட காவல் கண்காளிப்பாளா் ஆகியோருக்கு பதிவு தபால் மூலம் ஒப்புதல் அட்டையுடன் மனு அனுப்பப்பட்டது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் 17.12.2024 அன்று கிராம மக்கள் அனைவரும் இணைந்து காலை முதல் மாலை 7 மணி வரை கிருஷ்ணா ப்ளு மெட்டல் குவாரியை தடைசெய்யக்கோரி மனுவுடன் வட்டாட்சியரை சந்திக்க காத்திருந்து, மாலை வட்டாச்சியரை சந்தித்து குவாரியை தடைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு எங்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைத்தோம்.
இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் உறுதியளித்தார். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து மனு நிலையை பற்றி அறிய 21.12.2024 அன்று காலை 11 மணியளவில் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேரில் சென்றபோது மேற்படி சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகம் மெயின்கேட் இழுத்துப் பூட்டப்பட்டு எங்களை உள்ளே விடாமல் தடுத்து விட்டனர்.
நாங்கள் சாத்தான்குளம் காவல் துனை கண்காணிப்பாளா் சுபக்குமார் அவா்களிடம் மனு சொடுத்தோம். இதுபோல் இனிமேல் மனு கொடுக்க வரும் பட்சத்தில் அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்துவிடுவேன் என எச்சரித்து மிரட்டி, குவாரிக்கு ஆதரவாளராக செயல்பட்டார். மேலும், 19.12.24 அன்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஒன்றினணந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம். கிராம மக்களின் வாழ்வாதரத்தை பாதிக்கும் கல்குவாரியை தடை செய்ய வேண்டும் என தமிழ அரசுக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
— மணிபாரதி.