அங்குசம் சேனலில் இணைய

கோவில்பட்டி – காவல்துறையை கண்டித்து பள்ளி மாணவி தற்கொலை முயற்சி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

காவல்துறையை கண்டித்து பள்ளி மாணவி மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் ஏறி நின்று தற்கொலை முயற்சி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மாணவியை பத்திரமாக மீட்டனர்.

கோவில்பட்டி வடக்கு திட்டங்குளத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். கார் டிரைவர். இவருக்கும் இவரது சகோதரர்கள் அஜய் குமார் மற்றும் வேல்முருகன் ஆகியோருக்கும் தனியார் நிதி நிறுவனத்தின் கடன் மூலம் கார் வாங்கியது தொடர்பாக பணம் கொடுக்கல் வாங்கலில்  தகராறு ஏற்பட்டுள்ளது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

பள்ளி மாணவி தற்கொலை முயற்சி
பள்ளி மாணவி தற்கொலை முயற்சி

இது சம்பந்தமாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் வேல்முருகன் மனைவி ஜோதியும், மாவட்ட காவல் அலுவலகத்தில் கார்த்திகேயன் மனைவி மரகதவள்ளியும் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் போலீஸ் அதிகாரிகள்  விசாரணை சரியாக இல்லையெனவும்,  காரை ஒரு தரப்பு அபகரித்து விட்டதாகவும், இதனால்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தங்களது குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கார் டிரைவர் கார்த்திகேயனின் 11வது வகுப்பு படிக்க மகள் தன்யா இன்று காலையில் கோவில்பட்டி – எட்டயபுரம் நெடுஞ்சாலையில் உள்ள மேல்நிலை நீர் தேக்க குடிநீர் தொட்டியில் ஏறி நின்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் உள்ளிட்ட போலீசார் மற்றும்  தீயணைப்புத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சிறிது நேரத்திலேயே மாணவி தன்யாவை  மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் இருந்து கீழே இறக்கி பத்திரமாக மீட்டனர். இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

—  மணிபாரதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.