மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி திட்டம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், கை, கால் பாதிக்கப்பட்டோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திருமண நிதியுதவி திட்டம், பார்வையற்றோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திருமண நிதியுதவி திட்டம், காது கேளாத மற்றும் வாய்பேசாதோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திருமண நிதியுதவி திட்டம், மாற்றுத்திறனாளியை மாற்றுத்திறனாளி  திருமணம் புரியும் திருமண நிதியுதவி  திட்டத்தின் கீழ் நிதியுதவி மற்றும் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருமணம் புரிந்த  மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25000 மற்றும் 8 கிராம் தங்க நாணயமும், தம்பதியரின்  எவரேனும் ஒருவர் பட்ட படிப்பு அல்லது பட்டய படிப்பு படித்தவராக இருந்தால் ரூ.50000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம்  வழங்கப்பட்டு வருகிறது.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

மாற்றுத்திறனாளிகள் திருமண நிதியுதவி
மாற்றுத்திறனாளிகள் திருமண நிதியுதவி

இத்திருமண தம்பதியர்களில் இருவருக்கும் முதல் திருமணமாக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து ஒராண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதார் அட்டை, திருமண அழைப்பிதழ் மற்றும் திருமண நாளில் எடுக்கப்பட்ட புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், கணவன் மனைவி இருவரின் ஒருவர் நல்ல நிலையில் உள்ளார் என மருத்துவச் சான்று, குடும்ப அட்டையின் நகல், கல்வி சான்றின் நகல் மற்றும் தம்பதியர் இருவருக்கும் மணமாகவில்லை என்பதற்கான சான்று (இணையதளம் வாயிலாக பெற வேண்டும்) ஆகியவற்றுடன் https://www.tnesevai.tn.gov.in/citizen/Registration என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி கண்டோண்மென்ட் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக பின்புறத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலோ அல்லது  0431- 2412590 என்ற அலுவலக தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த திருமண நிதியுதவி திட்டத்தினை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.