அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அய்யா வைகுண்டரை சனாதன ( மனுதர்மம் ) கூண்டில் அடைக்கும் ஆளுநர் இரவி! தமிழ் ஆன்மீக சமூகத்தின் கண்டனம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

அய்யா வைகுண்டருக்கு சனாதன ( மனுதர்மம் ) கூண்டில் அடைக்கும் காவி ஸ்டிக்கர் ஒட்டும் ஆளுநர் இரவி! தமிழ் ஆன்மீக சமூகத்தின் கண்டனம்!

அய்யா வைகுண்டர் அவர்களின் 193 – ஆவது அவதார தினத்தை முன்னிட்டு,  பகவான் விஷ்ணுவின் தெய்வீக அவதாரமாக அய்யா வைகுண்டர் அவதரித்தார் – ஆளுநர் ஆரன் ரவி அவர்கள் X தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனை எதிா்த்து தமிழ் ஆன்மீக சமூகத்தின் கண்டனம் தொிவித்துள்ளனா்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

சமத்துவ மண்ணான தமிழ்நாட்டின் சமத்துவ சமயக் கோட்பாடுகளைத் தொடர்ந்து திருடி சனாதன ( மனுதர்மம் ) கூண்டில் அடைக்கும் காவி ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது பார்ப்பனியம்.

திருவள்ளுவர், வள்ளலார் தொடங்கி இன்று  அய்யா வைகுண்டர் வரையில் திருட்டு தொடர்கிறது.

Admission Enquiry Form

ஆர் எஸ் எஸ், ஆளுநர் ரவி, அண்ணாமலை இணைந்து நடத்தும் இக்கூத்தினை அறிவார்ந்த சமத்துவ நெறி கொண்ட தமிழகத்தின் ஆன்மிக மரபு நிராகரிக்கிறது.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்  வன்மையாக கண்டிக்கிறது.

சனாதனம் பேசுகிற உருவ வழிபாடு என்ற அடிப்படைக்கே எதிரானவர் அய்யா. அய்யாவை வணங்கும் இடங்கள் சனாதனம் சொல்கிற கோவில்கள் எனவும் அழைக்கப்படுவது இல்லை.

நீ வணங்கும் இறைவன் என்பவன் உனக்குள்தான் இருக்கிறான் என்கிற தத்துவத்தைச் சொல்கிறவர் அய்யா வைகுண்டர். சனாதனத்தின் அடிப்படை அம்சங்களை அடியோடு நிராகரித்தவரே அய்யா வைகுண்டர்.

மண்ணின் பூர்வ குடிகள் மீது மனிதகுல விரோதமான அடக்குமுறைகள் ஏவப்பட்ட காலம்.

அதாவது,

பெண்கள் மார்பு சேலை அணிய தடை

பெண்கள் இடுப்பில் குடம் சுமக்கவும் தடை

பெண்கள் நகைகள் அணியவும் தடை

ஆண்கள் தலைப்பாக கட்டத் தடை

ஆண்கள் மீசை வளர்க்கத் தடை

ஆண்கள் வளைந்த கைப்பிடி குடை பயன்படுத்தத் தடை

இப்படித்தான் சனாதன தர்மத்தின் பேரால் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள்- வன்கொடுமைகள், அய்யா வைகுண்டர் காலத்தில் நிகழ்த்தப்பட்டன. இவை அனைத்தையும் அதாவது ஆளுநர் ரவி சொல்வது போலவே சனாதன தர்மத்தின் பேராலான இக்கொடுமைகளை அய்யா வைகுண்டர் ஏற்றாரா? எதிர்த்தாரா? என்பதற்கு சரித்திரத்தில் பதில் உள்ளது..

ஏனெனில் சனாதன தர்மத்தின் பெயரால் மேலே இழைக்கப்பட்ட கொடுமைகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க அய்யா வழி என சனாதனத்துக்கு எதிரான சமயத்தையே உருவாகியவர் அய்யா வைகுண்டர்.

அவரை இப்போது வலதுசாரிகள் கபளீகரம் செய்ய பார்க்கிறார்கள் என்பது தீவிர அய்யா வழி பக்தர்கள் கருத்தாக உள்ளது.

அய்யா வைகுண்டர் அவதார தினம்
அய்யா வைகுண்டர் அவதார தினம்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இடுப்பில் துண்டும் தலையில் தலைப்பாகையும் கட்ட கூடாது என்றது சனாதனம். ஆனால் அய்யா வைகுண்டரோ துண்டை தலைப்பாகையா கட்டு என கட்டளையிட்ட போராளி.

அய்யா வழியில் இன்றும் தலைப்பாகை அணிவது இதற்குதான். ஒவ்வொரு அய்யா வழி பதியில் ஜாதி- மதம்- ஆண்- பெண் என ஒரு வேறுபாடும் இல்லை.

சனாதனம் கற்பித்த அத்தனை ஒடுக்குமுறைகளையும் காலந்தோறும் தகர்க்கும் வகையில் வலிமையான அய்யா வழி எனும் சமயத்தை தந்தவர் அய்யா வைகுண்டர்.

அய்யா வழி வழிபாட்டு முறை ஏதேனும் சனாதனத்தின் உயிர்நாடி சமஸ்கிருதத்தில் இருக்கிறதா? சனாதனம் நீஷபாசை என சொல்லும் தமிழில் இருக்கிறதா? என்றெல்லாம் ஆராயாமல் அள்ளிவிட்டுக் கொண்டிருக்கக் கூடாது.

“ஏடுதந்தேன் உன்கையில் எழுத்தாணியும் கூடத் தந்தேன் பட்டங்களும் பட்டயமும் தந்து பகை தீர்ந்தேன் என் மகனே..”

என அய்யா வைகுண்டர் வலியுறுத்துவது எதனைத் தெரியுமா?

சூத்திரன் படித்தால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என சொன்ன சனாதனத்துக்கு எதிரான அய்யா வைகுண்டரின் சண்டமாருத முழக்கம் இது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும்.. புரிந்தும் புரியாமல் பொய்யும் புனைபுரட்டுமாய் சனாதனம் பேசும் சக்திகளுக்கு எப்படி புரியும்?

தமிழ்நாட்டின் கோயில்களை பார்ப்பனீயப் பிடியிலிருந்து மீட்கப் போராடிவரும் மாபெரும்  திராவிட இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் ஆர் எஸ் எஸ் கூட்டம் அதன் ஒரு பகுதியாக சமத்துவ தமிழ் மரபுகளை கையகப்படுத்தும் வேலையைச் செய்து வருகிறது.

சிதம்பரத்தில் பட்டியல் சமூகத்தினருக்கு பூணூல் போடுவது, வள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது, வள்ளலாரை சனாதன சிமிழுக்குள் அடைப்பது வைகுண்டரை பார்ப்பனிய மயமாக்குவது என்ற ஆன்மீக சித்து வேலைகளை பார்ப்பனிய அயோக்கியத்தனங்களை தமிழ்நாட்டின் சமத்துவ ஆன்மீகம் உறுதியாக நிராகரிக்கிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் – யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மாபெரும் சமத்துவ மரபு கொண்ட தமிழ் ஆன்மீக சமூகம் ஆர்எஸ்எஸ் பாஜக ஆளுநர் ரவி அண்ணாமலையின்    சனாதன ( மனுதர்மம் ) கூண்டில் அடைக்கும் காவி ஸ்டிக்கர் ஓட்டும் அரசியலை மோசடியான ஆன்மிகத்தை கடுமையாக எதிர்க்கிறது வன்மையாகக் கண்டிக்கிறது.

பட்டியல் சமூகத்தினருக்கு பூணூல் போட்டு பார்ப்பனிய சிமிலுக்குள் அடைக்கும் ஆர்.என். ரவி சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாட பட்டியல் சமூகத்தை அனுமதிப்பாரா?

தீட்சதர்களிடம் பேசுவாரா?

தமிழகம் முழுக்க உள்ள சைவ வைணவ கோயில்களில் பிறப்பால் பார்ப்பனர் தவிர மற்ற கவுண்டர் தேவர் நாடார் வன்னியர், ஆதிதிராவிடர் உள்ளிட்ட இந்து தமிழ் சாதியினரை அர்ச்சகராக்க கோரிக்கை வைப்பாரா?

உண்மையில் இந்துக்களுக்கான கட்சி பாஜக எனில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பாஜக குரல் கொடுக்காதது ஏன்?

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தனது பார்ப்பனிய, சனாதன வைதீக ஆன்மீகத்தில் நம்பிக்கை அற்று, மாபெரும் தமிழ் சமய மரபை களவாடும் இக்கூட்டத்தை மொத்தமாக  முறியடிப்போம்.

ஆர்எஸ்எஸ் ஆளுநர் ஆர்.என். ரவியையும் வீட்டுக்கு அனுப்ப  தமிழ் ஆன்மீக உலகம் கோயில், கோயிலாகச் சென்று தனது பணியைச் செய்யும். தனது மரபை, ஆன்மீகத்தை பேணிப் பாதுகாக்கத் தவறிய எந்த ஒரு இனமும் வரலாற்றில் நீடிக்காது.

நமது தனித்த  சமத்துவ ஆன்மீக மரபை பாதுகாப்போம் ஆர்எஸ்எஸ் ஆளுநர் ரவி கூட்டத்தை நிராகரிப்போம்!

ஆரிய பார்ப்பனியத்தை வீழ்த்துவோம்! கோயில்களில் சமத்துவத்தை நிலைநாட்டப் போராடுவோம்.

 

வா.ரங்கநாதன், தலைவர்,

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.