மதத்தையும் மொழியையும் வைத்து அரசியல் செய்பவர்கள் பாஜகவினர் – துரை வைகோ

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விருதுநகரில் முன்னாள் அமைச்சர்களுக்குள் நடைபெறும் விவாதம் கட்சியினர்களுக்குள் நடக்கும் விவாதம் அது குறித்து கருத்து கூற முடியாது. அரசியல் ஆலோசகராக இருக்கும் பிரசாந்த் கிஷோர் உடைய கட்சி பீகாரில் படு தோல்வி தழுவியது. விஜய் உடைய கொள்கை சித்தாந்தங்களை வரவேற்கின்றோம். ஆனால் அவர் மக்களை சந்திக்க வேண்டும் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் மதுரையில் திருமண விழாவில் பங்கு பெற்ற பிறகு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேட்டி ….

மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகி உடைய இல்ல விழாவில் கலந்து கொண்ட திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, திருமண வைபவத்தை நடத்தி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

Frontline hospital Trichy

மக்காச்சோளத்திற்கு ஒரு சதவீதம் செஸ் வரி விதிக்கப்பட்ட நிலையில் ,அது நீக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் துணை முதல்வர் ஆகியோரிடத்தில் எனது கோரிக்கையை வைத்தேன்.

படு தோல்வி தழுவிய விஜய் கொள்கை

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

அந்த கோரிக்கையின் பலனாக தற்போது முதல்வர் அவர்கள் எனது கோரிக்கையை ஏற்று தற்போது தமிழக அரசு ரத்து செய்துள்ளது. முதல்வர் அவர்களுக்கு எனது நன்றி. நேற்றைய தினம் தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்தித்தேன்

விவசாயிகள் சார்பாகவும் மதிமுக சார்பாகவும் தமிழக முதல்வர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி தொழிலை நம்பி லட்சக்கணக்கான குடும்பங்கள் இருந்து வரக்கூடிய வேளையில் பிளாஸ்டிக் லைட்டர்கள் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோன்று பிளாஸ்டிக் லைட்டர்களுக்கான உதிரி பாகங்கள் தமிழகத்தில் தயார் செய்யப்படுகிறது. அவற்றை விற்பனை செய்வதற்கு நமது தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். இதனால் தீப்பெட்டி தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழகத்திலிருந்து திமுகவை உடனடியாக அகற்ற வேண்டும் என்கின்ற விஜயின் வீடியோ குறித்த  கேள்விக்கு ….

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அன்புச் சகோதரர் விஜயை பொறுத்தவரை மிகப் பெரிய ஒரு நட்சத்திரம் அவர் பின்னால் லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவருடைய கொள்கை சித்தாந்தத்தை சொல்லியிருக்கிறார் அதை நாங்கள் வரவேற்கின்றோம். அவர் ஜனங்களிடம் செல்ல வேண்டும் உங்களைப் போன்ற ஊடகவியலாளர்களை அவர் சந்திக்க வேண்டும் அதை வைத்து தான் அவருடைய அரசியல் எதிர்காலம் இருக்கிறது.

ஒரு கட்சியின் தலைவராக அவர் அவருடைய கருத்துக்களை சொல்லி இருக்கின்றார் வரக்கூடிய தேர்தலில் மக்கள் அதற்கான தீர்ப்பை கொடுப்பார்கள்.

பாஜகவை பொருத்தமட்டில் பாஜக முன்னாள் தலைவர் அக்கா தமிழிசை அவர்கள் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அது சர்ச்சைக்காகியது கல்வி வளாகத்திற்குள் சென்று வலுக்கட்டாயமாக அவர்களை மிரட்டும் தொணியில் கையெழுத்து போட வைப்பது தவறு. உயர்ந்த பதவியில் இருந்தவர்கள் காவல்துறை அனுமதி பெறாமல் இவ்வாறு செல்லலாமா…. அமைதி கிடைக்கின்ற வகையில் அவருடைய நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் காவல்துறையினர் அதற்கான நடவடிக்கை எடுக்கின்றார்கள்.

தீவிரவாதியை விட மோசமானவர்கள் மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள். மதவாத சக்திகள் வேர் ஊன்ற விடக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் கூட்டணி வைத்து இருக்கிறோம்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மதத்தையும் மொழியையும் வைத்து தற்போது அரசியல் செய்பவர்கள் பாஜகவினர். வடமாநிலங்களில் ஆங்கிலம் அன்னிய மொழி என்று சொல்லும் பாஜகவினர் இங்கே மும்மொழி கொள்கையை தினிப்பதற்கு ஏன் முயற்சி செய்கிறார்கள். ஆங்கிலமே  இல்லாமல் இந்த நாட்டை உருவாக்க வேண்டும் என்று அமித்சா போன்ற வட மாநிலத் தலைவர்கள் பிரச்சாரம் சொல்கிறார். மதத்தையும் மொழியையும் தற்போது கையாளுகிறார்கள்  பாஜகவினர்

திராவிட இயக்கங்களான திமுக மற்றும் அண்ணா திமுக தமிழுக்கான அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். தமிழ் மொழியை பொருத்தமட்டில் குறிப்பாக வெளிநாடுகளில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களுக்குள் தமிழை வளர்ப்பதற்கான முயற்சிகளை செய்திருக்கிறார்கள்.

 

—  ஷாகுல், படங்கள் :ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.