திருச்சி – நகர்நல சுகாதார மைய மருத்துவ காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு !
திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார சங்கம் மூலம் மணப்பாறை மற்றும் துறையூர் நகர்புர அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகஉள்ள ஒரு மருத்துவ பணியிடம் ரூ.60,000/- மாத ஊதியத்திலும் ஒரு செவிலியர் பணியிடம் ரூ.18.000/- மாத ஊதியத்திலும் ஒரு பல்நோக்கு சுகாதார பணியாளர் பணியிடம் ரூ.14,000/- மாத ஊதியத்திலும் மருத்துவமனை பணியாளர் பணியிடம் ரூ.8,500/- மாத ஊதிய டிப்படையில் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
மேலும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 11 நகர்நல சுகாதார மையம் மற்றும் காலியாக உள்ள இரண்டு நகர்நல சுகாதார மையங்களுக்கு ஒரு மருத்துவர் பணியிடம் ரூ.60,000/- மாத ஊதியத்திலும் ஒரு செவிலியர் பணியிடம் ரூ.18.000/- மாத ஊதியத்திலும் ஒரு பல்நோக்கு சுகாதார பணியாளர் பணியிடம் ரூ.14,000/-மாத ஊதியத்திலும் 14 மருத்துவமனை பணியாளர் பணியிடம் ரூ.8,500/- மாத ஊதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேற்காணும் மணப்பாறை மற்றும் துறையூர் நகர்புர அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், ரேஸ் கோர்ஸ் ரோடு, ஜமால் முகமது கல்லுரரி அருகில், T.V.S.டோல்கேட், திருச்சிராப்பள்ளி அலுவலகத்திலும் மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 11 நகர்நல சுகாதார மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் மாநகரநல அலுவலர், மாநகரநல அலுவலகம், பாரதிதாசன் சாலை, கன்டோன்மெண்ட், திருச்சிராப்பள்ளி. அலுவலகத்திலும் வருகின்ற 24.03.2025 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.