’டெஸ்ட்’ பட ஃபங்ஷன்! நயன் ஆப்சென்ட்! ‘பட் நோ அப்செட்’
எஸ். சஷிகாந்த் இயக்கத்தில், YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டெஸ்ட்’ படம் ஏப்ரல் 4 அன்று நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதனால் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மார்ச் 25 ஆம் தேதி மாலை சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடந்தது.
நிகழ்வில் நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் வைஸ் பிரெசிடெண்ட் மோனிகா ஷெர்கில், படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மாதவன், சித்தார்த் , நடிகை மீரா ஜாஸ்மின் ஆகியோர் பேசி முடித்ததும்….

இயக்குநர் & தயாரிப்பாளர் சஷிகாந்த்,
“நான் சினிமாவுக்கு வந்ததே படம் இயக்கத் தான். ஆனால், இயக்கம் தெரியாததால் அதை கற்றுக் கொள்ளவே YNOT ஸ்டியோஸ் தொடங்கினேன். இந்த ‘டெஸ்ட்’ படத்தின் கதாபாத்திரங்களை புரிந்து கொள்ள மெச்சூர்டான நடிகர்கள் தேவைப்பட்டார்கள். எனக்குமே இந்தப் படத்திற்காக பல டெஸ்டுகள் தேவைப்பட்டன. அதனால்தான் படம் வெளியாக இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டேன்”. என்றார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
விழா முடியும் வரை காத்திருந்தும் ‘ டெஸ்ட் ‘ ஹீரோயின் நயன்தாரா அவரது வழக்கப்படி ஆப்சென்ட் போட்டுவிட்டாலும் அப்செட் ஆகவில்லை தயாரிப்பாளர் & இயக்குனர் சஷிகாந்த். ஏன்னா நயன் குணம் நாடறிந்த குணம்.
— மதுரை மாறன்.