அங்குசம் பார்வையில் ‘ தி டோர் ‘.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு: ‘ஜூன் ஸ்டுடியோஸ்’ நவீன் ராஜன். டைரக்டர்: ஜெய் தேவ். ஆர்ட்டிஸ்ட்: பாவனா, கணேஷ் வெங்கட்ராம், ஜெயப்பிரகாஷ், நந்தகுமார், ஸ்ரீரஞ்சனி, சங்கீதா, மேகா, கபில், ப்ரியா வெங்கட், சிந்தூரி, ‘பைரி’ வினு. ஒளிப்பதிவு: கெளதம், இசை: வருண் உன்னி, எடிட்டிங்: அதுல் விஜய், ஸ்டண்ட்: மெட்ரோ மகேஷ், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர்: எம்.விஜயகுமார். பி.ஆர்.ஓ.: பரணி அழகிரி.

போஸ்டரில் பாவனாவையும் போஸ்டர் டிசைனையும் பார்த்ததுமே,ஏதாவது ஒரு மலையாளப் படத்தை தமிழில் டப்பிங் பண்ணிருப்பாய்ங்க. இதுவும் பல ஆண்டுகள் தமிழ் சினிமா வழக்கமான பேய்ப்படம் போலத் தான் இருக்கப் போகுதுன்னு நினைச்சு தியேட்டரில் உட்கார்ந்தோம்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

தி டோர்
தி டோர்

ஆனால் முதல் சீனே மதுரையில் ஆரம்பிச்சதும் ” அடடா நம்ம ஊரு படம்னு நம்பிக்கை வந்துச்சு. மதுரையில் இருந்து ரத்னம் ( நந்தகுமார்) என்ற வக்கீல் சென்னையில் உள்ள ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து போன் செய்கிறார். அந்தப் பெண்ணோ போனை எடுக்க மறுக்கிறார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

கட் பண்ணா, கன்ஸ்ட்ரக்ஷன் வேலை நடக்கும் ஒரு இடத்தில் கோயில் கதவு ஒன்றை இடிக்கிறார்கள். அதிர்ச்சியாகப் பார்க்கிறார் ஸ்பாட்டில் இருக்கும் ஆர்க்கிடெக்ட் பாவனா. அடுத்த சீனில் அந்த வக்கீல் பலியாகிறார். யார் அந்த வக்கீல்? ஏன் பலியானார்?  அந்தப் பெண் யார்? என்பதற்கான க்ளைமாக்ஸ் தான் இந்த ‘தி டோர் ‘.

தி டோர்
தி டோர்

இந்தப் படத்துல ஏதோ இருக்கு என்ற எதிர்பார்ப்பை முதல் சீனிலேயே ஏற்படுத்தி விட்டார் டைரக்டர் ஜெய் தேவ். அதே சமயம் பேய்ப்பட ரெகுலர் ஃபார்முலாப்படி இடைவேளை வரை கால் மணி நேரத்திற்கு ஒரு முறை கருப்பு உருவம் ஒன்று சர்சர்ன்னு வந்து போவது, பாவனா அலறுவது , திடீரென கதவு மூடுவது என்பதையும் மறக்காமல் வைத்துள்ளார் டைரக்டர்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கதையின் மெயின் ஸ்ட்ரீமே இடைவேளைக்குப் பிறகு வரும் பேச்சியம்மன் கோயில் ஃப்ளாஷ் பேக்கில் தான் இருக்கு. இன்ஸ்பெக்டர் கணேஷ் வெங்கட்ராம், பாவனா தான் கொலையாளி என சொல்லி ட்விஸ்ட் வைத்து, க்ளைமாக்ஸுக்கு பத்து நிமிடம் முன்பு தொடர் பலிகளுக்கு பின்னணியில் இருக்கும் பெண் பேயின் ஆத்திரத்தை கரெக்டா பிரசண்ட் பண்ணி குழப்பமே இல்லாமல் படத்தை முடித்திருக்கும் டைரக்டர் ஜெய் தேவ் சபாஷ் பெறுகிறார்.

அருமையான பெர்ஃபாமெர் பாவனாவை பிக் ஸ்கிரீன்ல பார்த்து எவ்வளவு நாளாச்சு? சும்மா சொல்லக்கூடாது இந்த ‘தி டோர் ‘ அவருக்கு நல்ல வாய்ப்பு. கச்சிதமாக கேட்ச் பண்ணிவிட்டார்.

தி டோர்
தி டோர்

கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஓனராக பாவனாவின் அப்பா வக்கீல் நந்தகுமாரின் நண்பனாக ஜெயப்பிரகாஷ், இன்ஸ்பெக்டர் கணேஷ் வெங்கட்ராம், பாவனாவின் தங்கையாக வருபவர், பாவனா தோழியாக நடித்தவர், ஆவிகளுடன் பேசுபவராக வரும் நடிகர், வில்லன் இன்ஸ்பெக்டர் பைரி வினு, முதன்மை வில்லன் கபில் என அனைவருமே அளவான, கச்சிதமான நடிப்பை வழங்கியுள்ளார்கள்.

பேய் &  திகில் எஃபெக்ட்டுக்கு கேமராமேன் கெளதமும் மியூசிக் டைரக்டர் வருண் உன்னியும் நல்ல சப்போர்ட். எடிட்டர் அதுல் விஜய்யின் பிரிலியண்டான கட் & ஜாயிண்ட் தான் இந்த ‘தி டோர்’ – ஐ குழப்பம் இல்லாமல் ரசிக்க வைக்கிறது.  ரசிகர்களை ஏமாற்றாது இந்த டோர்.

 

—   மதுரை மாறன்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.