அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகளுக்கும் ஆஞ்சியோகிராபி..

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி மா காவேரி மற்றும் காவேரி  ஹார்ட் சிட்டி மருத்துவ சாதனை.. காவேரி மருத்துவமனையின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல  பிரிவான மா காவேரி மகப்பேறியல், பெண் நோயியல் மற்றும் குழந்தைகள் மருத்துவம் ஆகியவற்றில் விரிவான மற்றும் சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது .

காவேரி மருத்துவமனை ஹார்ட் சிட்டி இருதயவியல் மற்றும் இருதய அறுவை சிகிச்சைக்கான உலக தரம் வாய்ந்த சிறப்பு மையமாகும் . திருச்சியில் அமைந்துள்ள இந்த இரண்டு மருத்துவமனைகளும் 1200 க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் இயங்கி வரும் புகழ் பெற்ற காவேரி மருத்துவ குழுமத்தை சேர்ந்தவை.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

திருச்சி மா காவேரி மற்றும் காவேரி  ஹார்ட் சிட்டி தென் தமிழகத்தில் முதல் முறையாக பிறந்த சில நாட்களே ஆன இரண்டு பெண் குழந்தைகளுக்கு ஆஞ்சியோ கிராபி சிகிச்சை செய்து சிக்கலான இருதய பிரச்சனைக்கு முழுமையான தீர்வு அளித்துள்ளது. திருச்சி மா காவேரி மற்றும் காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனை. 

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இது குறித்து மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் செங்குட்டுவன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது , பிறந்து 48 மணி நேரமே ஆனது 2 கிலோ எடையுள்ள பெண் குழந்தை ஒன்றின் இதய வால்வு மிகவும் சுருங்கிய நிலையில் இருந்தது. இந்த சிக்கலான பிரச்சனையால் குழந்தைக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை. இந்த குழந்தை விஷயத்தில் இதயம் நுரையீரலுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் வால்வு வெகுவாக குறுகி இருந்தது .

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

திருச்சி மா காவேரி மற்றும் காவேரி  ஹார்ட் சிட்டி இதனால் குழந்தை ஆக்ஸிஜன் பெற சிரமப்பட்டது. இக் குழந்தைக்கு பலூன் பல்மோனரி வால்வுலோ பிளாஸ்டி  எனப்படும் உயிர் காக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் 11 நாட்களே ஆன ஒன்றை கிலோ எடை கொண்ட பெண் குழந்தைக்கு ரத்த ஓட்டத்தை பாதிக்கும் இதய பிரச்சினை இருந்தது இதனால் குழந்தை சுவாசப் பிரச்சினையால் அவதியுற்று  வந்தது. இதற்கு இதயத்தில் இருந்த ஒரு அசாதாரணமான ரத்த நாளமே அடிப்படை பிரச்சனை.  இதற்கு பேட்டண்ட் டக்டஸ் ஆர்டரி யோசஸ் என்று பெயர். இதற்காக  பிக்கோலோ எனப்படும் ஒரு சிறிய சாதனம் பொருத்தப்பட்டது.  குழந்தையின் சுவாசம் 48 மணி நேரத்தில் சீராகி விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது .

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த சிகிச்சை தென் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக செய்யப்பட்டது என்று தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது நிர்வாக இயக்குனர் மற்றும் அலகு தலைவர் டாக்டர் செந்தில்குமார் ,மூத்த பொது மேலாளர் மாதவன், மூத்த ஆலோசகர் செந்தில் குமார், குழந்தை இதய நோய் நிபுணர்கள் மணி ராம் கிருஷ்ணா மற்றும் வினோத் குமார் உடன் இருந்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.