முதல்வர் நிகழ்ச்சிகளில்  விஜய் ரசிகர்கள் அட்ரா சிட்டி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கொடி, புகைப்படம் காட்டி கூச்சல் பாதுகாப்பு இருக்கிறதா ? என கேள்விகேட்கும் திமுகவினர்!

திருப்பத்தூர், சென்னை நிகழ்ச்சிகளில் முதல்வர் முன்னிலையிலே நடிகர் விஜய் புகைப்படம் காட்டியும் தவெக .. தவெக.. கத்தி கூச்சலிட்ட விஜய் ரசிகர்கள் திமுகவினர் அதிர்ச்சி…

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடிகர்  விஜய்யின் படம் பொறித்த கர்சீப்பை காண்பித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த மாணவரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளார்கள்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா இன்று (ஜூன் 27) நடைபெற்றது இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், நடிகர் விஜய்யின் புகைப்படம் பொறிக்கப்பட்ட கர்சீப்பை அந்த விழாவில் பங்கேற்ற  மாணவர்கள் போர்வையில் வந்த அவரினீ ரசிகர்கள் காண்பித்தனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

விஜய் ரசிகர்கள் அட்ரா சிட்டி !அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விஜய்யின் புகைப்படம் பொறிக்கப்பட்ட கர்சீப்பை காட்டிய  நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் ரமணா என்பதும் சென்னை புதுக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு தமிழ் துறையில் படித்து வருவதும் அவர் விஜய் கட்சியில் நிர்வாகியாக இருப்பதும் தெரியவந்தது.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

இதைத் தொடர்ந்து அந்த மாணவரை போலீசார் விசாரணைக்காக திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள்

இதேபோல்..  திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க   முதல்வர் முக ஸ்டாலின் ரோட்ஷோ நடைப்பெற்றது.  ஸ்டாலின் நடந்து சென்றபோது அங்கு இருந்த ஒரு கும்பல் விஜய் வாழ்க. TVK .. TVK என கத்தி கூச்சலிட்டனர்..  டேய் சொல்றா மீண்டும் சொல்றா என ஒருவன் கத்த மீண்டும் மீண்டும் TVK TVK  .. கத்திய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் ரசிகர்கள் அட்ரா சிட்டி ! திட்டமிட்டே தங்களை அடையாப்படுத்திக்கொள்ள இதுபோன்ற ஈன செயல்களை விஜய் சினிமா ரசிகர்கள் செய்து வருகின்றனர் , நேற்று திருப்பத்தூர் இன்று சென்னையில் மாநில உளவுத்துறை என்ன செய்து கொண்டு உள்ளது ? திருப்பத்தூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் கண்டுக்காம இருப்பது ஏன் ?

இதுவே ஆயுதமாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் ? எனகேள்வி கேட்டு திமுக தொண்டர்கள் கொதித்தெழுந்து வருகிறார்கள்

 

 

—     மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.