திருச்சியும் சினிமாவும் …

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருவிளையாடல் திரைப்படத்தில் தருமி நாகேஷிடம் சிவபெருமான் சிவாஜியிடம் “ பிரிக்கமுடியாதது எதுவோ” என்று கேட்க “ தமிழும் சுவையும்” என்பார் தருமி…

அப்படித்தான் திருச்சியையும் சினிமாவும் பிரிக்கமுடியாது.

Sri Kumaran Mini HAll Trichy

80 களில் திருச்சி ஒன்றும் பெரிய ஊர் அல்ல.!!

ஒரு சைக்கிள் எடுத்தால் ஜங்கஷன் உறையூர் டோல்கேட் என்று மொத்தமே இருபது கிலோமீட்டருக்குள் அடங்கிவிடும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ஆனால் அரசியல் கூட்டங்கள் இரவு 11.00 மணிக்கு தொடங்கி விடியற்காலை மூன்று மணிவரை பரோட்டாவும் குருமாவும் சுடச்சுடச இடலி வழங்கும் இட்லி கடைகள் ஓவ்வொரு பகுதிக்கும் ஒரு திரையரங்கம் இவையெல்லாம் சேரந்துதான் திருச்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும்.!!

ஜங்கஷன் பகுதியில் ஆங்கில படங்களை மட்டுமே திரையிடும் பிளாசா தியேட்டர்.!!

இரண்டாவது ஷோ 12.00 மணிக்கே முடிந்து பிளாசா தியேட்டரிலிருந்து வெளயேறும் கும்பல் திரைப்படத்தை பற்றி பேசுவதைவிட பிளாசா தியேட்டரில் இடைவேளையின் போது சுடச்சுடச் போடப்படும் வாழைப்பூ வடையின் சுவையை பற்றியே பேசி கலையும்.!!

மெயின்கார்டுகேட்டில் இந்தி திரைப்படங்களை மட்டுமே திரையிடும் கெயிட்டி தியேட்டர்.!!

புதுப்படங்களை ரிலீஸ் செய்யும் ராக்சி-வெலிங்கடன் தியேட்டர்கள்.

அலைகள் ஓயவதில்லை, புதியவார்ப்புகள் ,சிகப்புரோஜா இந்தப் படங்கள் எல்லாம் ராக்சி- வெலிங்கடன் தியேட்டர்களில் தான்..

சிவாஜி படங்களை மட்டுமே வெளியிடும் பிரபாத் தியேட்டர் எம்ஜிஆர் படங்களுக்கு முருகன் தியேட்டர்,

Flats in Trichy for Sale

இன்றைய ராஜா காம்பெளக்ஸ் அன்றைய ராஜா தியேட்டர்கள் டி. ஆரின் முதல் படமான ஒரு தலை ராகம் , கே. பாக்கியராஜ் முந்தானை முடிச்சு போன்ற திரைப்படங்கள் வெள்ளிவிழா கண்டது இங்கேதான்.!!

Aruna Cinema Hall in Puthur,Trichy - Movie Theatre near you - Cinema Halls near me in Trichy - Justdial1979 ல் ஜூபிடர் தியேட்டரில் காற்றிலே வரும் கீதம் திரைப்படத்தை பார்த்து தியேட்டரை விட்டு வெளியே வந்த போது காவேரி வெள்ளம் திருச்சியில் நகருக்குள் கரைபுரண்டு ஓடியது.!!

1980 களில் ஜங்கஷன் கலையரங்கம் திரையரங்கம் எம்ஜிஆர் இறுதியாக நடித்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தோடு தன் சினிமா கணக்கை தொடங்கியது.!!

ஆசியாவிலே ஒரே காம்பெளக்ஸில் ஐந்து தியேட்டர்கள் என்று மாரீஸ் காம்பெளக்ஸ் தொடங்கியது திருச்சியில் சினிமா புத்தாடைக்குள் மாறியது.!!

சிவாஜி படங்களை மட்டுமே திரையிடும் பிரபாத் தியேட்டர் எம் ஜி ஆருக்கு முருகன் தியேட்டர் உறையூரில் அருணா தியேட்டர்

நவீன ஆங்கில படங்களுக்கு சிப்பி தியேட்டர் 3 டி திரைப்படங்களுக்கு மகாராணி தியேட்டர் இப்படி வகைவகையாய் தியேட்டர்கள்

LA Ciemas (Maris Theater), Trichy - Picture of LA Cinema Maris, Tiruchirappalli - Tripadvisorகொண்ட ஊர் திருச்சி மட்டுமே. அத்தனை தியேட்டர்களையும் மாரீஸ் தியேட்டர்கள் வாரி சுருட்டிக் கொண்டது.!!

என்றைக்கு மாரீஸ் வந்ததோ அன்றிலிருந்து திருச்சியில் சினிமா நவீனவடிவம் கொண்டது மட்டுமின்றி பராம்பரிய தியேட்டர்கள் அத்தனையையும் காலி செய்துவிட்டது.!!

இன்றும் “எல்.ஏ சினிமா” என்ற பெயரில் சக்கைபோடு போடுகிறது.!!

என்னைப்போன்ற 80 kட்ஸ் அக்கா வளர்மதி புதுசா திருச்சிக்கு கல்யாணம் கட்டிவந்துஅடுக்கையடியில் அக்கா ஒரு பச்சைகலர் டப்பாவிலிருந்து எடுத்துகொடுத்த காசில் ராக்சி- வெலிங்கடன் தியேட்டர்களில் பார்த்த திரைப்படங்களை மெல்ல அசைபோட்டபடி அந்த பகுதிகளை கடந்து போகிறோம்.!!

 

—  செல்வராஜ் கருப்பையா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.