எம்.எஸ்.பாஸ்கருக்கு மரியாதை! ‘கிராண்ட் ஃபாதர்’ ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்!
‘குட்டி ஸ்டோரீஸ்’ பேனரில் புவனேஷ் சின்னச்சாமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கிராண்ட் ஃபாதர்’. நடிகரான ஃப்ராங் ஸ்டார் ராகுல் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். கதையின் நாயகன்களாக சீனியர் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரும் ஃப்ராங் ஸ்டார் ராகுலும் நடிக்கும் இப்படத்தில் ஸ்மீகா, அருள்தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த், பிரியதர்ஷினி, அஞ்சலிராவ், அபிநயா உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு : ஸ்ரீதர், இசை : ரஞ்சின் ராஜ், எடிட்டிங் : திவாகர், ஆர்ட் டைரக்டர் : பிரேம், நிர்வாகத் தயாரிப்பாளர் : ஷிஜு அலெக்ஸ், இணைத் தயாரிப்பு : மெட்ரோமுரளி, மெட்ரோ கிரி, பி.ஆர்.ஓ. யுவராஜ்.
ஹாரர் & ஃபேண்டஸி ஜானரிலான இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் சீனியர் நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு ‘பார்க்கிங்’ படத்தில் நடித்ததற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதனால் பெரிதும் மகிழ்ச்சியான ‘கிராண்ட் ஃபாதர்’ படக்குழுவினர், பாஸ்கரை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், அவருக்கு மரியாதை செய்யும்விதமாக படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை ரிலீஸ் பண்ணியுள்ளனர்.
— மதுரை மாறன்